இந்த 5 ஆப்களும் உங்க ஸ்மார்ட்போனில் இருந்தா.. உடனே டெலீட் செய்யவும்! ஏனென்றால்?

|

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோர் தளங்களில் ஆப்களை (செயலிகளை) பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஆப்களின் பாதுகாப்பு தன்மையை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

குறிப்பாக சில செயலிகள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது, அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கூட கொடுக்கிறது. ஆனால் ஒரு சில செயலிகள் நமது டேட்டாக்களை திருட வாய்ப்பு உள்ளது. எனவே செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன்பு அதன் பாதுகாப்பு வசதி எப்படி? என்பதை முழுவதுமாக தெரிந்துகொண்டு பதிவிறக்கம் செய்யவும்.

108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!

ஐந்து தீங்கிழைக்கும் ஆப்

ஐந்து தீங்கிழைக்கும் ஆப்

அதேபோல் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது டேட்டாக்களை திருடும் செயலிகளை நீக்கிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஐந்து தீங்கிழைக்கும் செயலிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றறை திருடும்ஆப்களை தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர்

ஆனால் இந்த செயலிகள் இன்னும் கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளதால்,செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. மேலும் அந்த ஆப்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

இன்றுமுதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு: சமீபத்திய எம்2 சிப்செட் ஆதரவு பாஸ்- விலை என்ன தெரியுமா?இன்றுமுதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு: சமீபத்திய எம்2 சிப்செட் ஆதரவு பாஸ்- விலை என்ன தெரியுமா?

PIP Pic கேமரா போட்டோ எடிட்டர்

PIP Pic கேமரா போட்டோ எடிட்டர்

PIP Pic Camera Photo Editor எனும் இந்தசெயலி ஆனது புகைப்படங்களை எடிட்டிங் செய்ய பயன்படும். இந்த செயலி பேஸ்புக் லாகின் விவரங்களை திருடும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பயனர்களின் பேஸ்புக் விவரங்களை திருடும். இதுவரை ஒரு மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது இந்த PIP Pic Camera Photo Editor செயலி.

அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!

ZodiHoroscope ஆப்

ZodiHoroscope ஆப்

ZodiHoroscope ஆப் ஆனது டேட்டிங் ஆப் சாயலில் இயங்குகிறது. குறிப்பாக இதுவும் ஒரு மால்வேர் செயலியாகும். அதாவது இந்த ஆப் பயனர்களின் பேஸ்புக் தகவல்களை திருடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான முறை இந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!

Wild & Exotic Animal Wallpaper ஆப்

Wild & Exotic Animal Wallpaper ஆப்

Wild & Exotic Animal Wallpaper எனும் இந்த செயலியில் உள்ள ஓரு ஆட்வேர் ட்ரோஜன் உங்களது ஐகான் மற்றும் பெயரை சிம் டூல் கிட் மூலம் மாற்றுகிறது. பின்பு இது பேட்டரி சேமிப்பிலும் தன்னைச் சேர்க்கிறது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

PIP கேமரா 2022 ஆப்

PIP கேமரா 2022 ஆப்

PIP கேமரா 2022 ஆப் ஆனது பேஸ்புக் தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது. எனவே இதை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது. இதுவரை பிளே ஸ்டோரில் இந்த PIP கேமரா 2022 செயலியை 50,000-க்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? அச்சச்சோ.! FE பிரியர்கள் இதை விரும்பவே மாட்டார்கள்..சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? அச்சச்சோ.! FE பிரியர்கள் இதை விரும்பவே மாட்டார்கள்..

Magnifier Flashlight ஆப்

Magnifier Flashlight ஆப்

Magnifier Flashlight எனும் இந்த செயலியை பிளே ஸ்டோரில் 10,000-க்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். குறிப்பாக இது ஒரு ஆட்வேர் செயலி என்று கூறப்படுகிறது. ஆனால் இது வீடியோ மற்றும் பேனர் விளம்பரங்களை கொண்டுவருகிறது. எனவே இவற்றை கிளிக் செய்யும் பயனர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது இந்த செயலி.

முன்பு கூறியது போல் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது மிகவும் நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
five malware apps that steal users' information: Delete from your phone now; check list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X