சத்தமில்லாமல் ஐந்து ஜியோபோன் டேட்டா திட்டங்கள் அறிமுகம்!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஐந்து புதிய டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த வாரம் இந்நிறுவனம் 12 மாதங்கள் செல்லுபடியாகும் ரூ.749 திட்டத்தை ஜியோபோன் பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. இந்நிலையில்சத்தமில்லாமல் புதிய ஐந்து டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது நிறுவனம். மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட
டேட்டா திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகாப் பார்ப்போம்.

ஜியோபோன் ரூ.22 டேட்டா திட்டம்
ஜியோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.22 திட்டம் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு 2ஜிபி 4ஜி டேட்டாவை கொடுக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் JioTV , JioCinema, JioSecurity மற்றும் JioNews போன்ற Jio பயன்பாடுகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

ஜியோபோன் ரூ.52 டேட்டா திட்டம்
ஜியோபோன் ரூ.52 டேட்டா திட்டம் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு 6ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் 6ஜிபி டேட்டா தீர்ந்ததும் 64 Kbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். அதாவது இந்த டேட்டா வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும்.

ஜியோபோன் ரூ.72 டேட்டா திட்டம்
ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.72 திட்டம் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 14ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் ரூ.102 டேட்டா திட்டம்
ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.102 திட்டம் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில்மொத்தமாக 28ஜிபி டேட்டா நன்மையைபெறமுடியும்.

ஜியோபோன் ரூ.152 டேட்டா திட்டம்
ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.102 திட்டம் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மையைவழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மையைபெறமுடியும்.

குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து திட்டங்களும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioNews போன்ற Jio பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் வருகின்றன. இந்த ஐந்து திட்டங்களும் டேட்டா நன்மைகளுக்கு வேண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எஸ்எம்எஸ், குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications