BSNL சிம் இருக்கா..தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ரூ.500க்குள் மிஸ் பண்ணக்கூடாத 5 திட்டங்கள்..
ஏர்டெல் (airtel), ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.229 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அரினா கேம்ஸ் (Arena Games) சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 347 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது
தினமும் 100 எஸ்எம்எஸ், M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 திட்டத்தில் உள்ளன. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 399 Prepaid Plan) தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்.


Click it and Unblock the Notifications