Home
News

ரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவில் வெளியானது.!!

By Meganathan

இந்திய சந்தையில் தனது முதல் ஃபிட்னஸ் பேன்டு கருவியை ஸ்வைப் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதன்படி ஸ்வைப் எஃப்-பேன்டு ஃபிட்னஸ் ட்ராக்கர் கருவியின் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டீல் தளத்தில் இந்த ஃபிட்னஸ் பேன்டு கருவியின் விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவில் வெளியானது.!!

மற்ற ஸ்மார்ட் ட்ராக்கர் கருவிகளை போன்றே இந்த கருவியும் வாடிக்கையாளர்களின் தினசரி நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. பயனர்கள் தினசரி எத்தனை தூரம் நடந்தார்கள், அதன் மூலம் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் எத்தனை போன்ற தகவல்கள் உட்ப்பட தூக்கத்தை ட்ராக் செய்யும் திறனும் இந்த கருவி கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

 ரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவில் வெளியானது.!!

ஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதோடு எஃப்-பேன்டு ஃபிட்னஸ் செயலியில் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்கின்றது. மேலும் இந்த ஃபிட்னஸ் ட்ராக்கர் சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது. இது ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்கின்றது. இதோடு இந்த பேன்டு 55 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.1,499க்கு ஃபிட்னஸ் பேன்டு : இந்தியாவில் வெளியானது.!!

ஸ்வைப் எஃப்-ஃபிட்னஸ் பேன்டு கருவியின் விலை ரூ.1,499 என்றாலும் முதலில் வாங்கும் 100 வாடிக்கையாளர்களுக்கு இந்த கருவி ரூ.1,299க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் இந்த ஃபிட்னஸ் பேன்டு பார்க்க ஸ்மார்ட் வாட்ச் போன்று காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருவியின் விலை மற்ற விலை குறைந்த பேன்டுகளுக்கு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
fitness tracker launched in India at Rs 1,499. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X