உறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்! உஷார் மக்களே.!

|

ஸ்மார்ட்போன் வெடித்த பல சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம், கேட்டிருக்கிறோம். இப்போது இந்த சம்பவங்கள் ஸ்மார்ட்போன்களுடன் நிற்காமல் ஸ்மார்ட் ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்களிலும் நடக்கிறதென்று தெரியவந்துள்ளது. இரவு உறக்கத்தில் கையிலிருந்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட் வெடித்து தீக்காயம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்

ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்

அமெரிக்காவில் உள்ள லோவா என்ற பகுதியில் வசிக்கும் ஈதன் லேண்டர்ஸ் என்பவர் பயன்படுத்தி வந்த பிரபல ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட் மாடலான ஃபிட்பிட் (FitBit) சாதனம் தான் வெடித்துள்ளது. கூகுள் நிறுவனம் அண்மையில் தான் ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

தூங்கிக் கொண்டிருந்த போது தீப்பிடித்த பேண்ட்

தூங்கிக் கொண்டிருந்த போது தீப்பிடித்த பேண்ட்

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் ஸ்மார்ட் பேண்ட் புகைந்து எரியத் துவங்கியுள்ளது. அவர் உறக்கத்தில் தன் கையில் எதோ எறிகிறது என்று உணர்ந்தபோது அவர் ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்டில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டிருக்கிறார். உடனே ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்டை கழற்றி எரிய முயற்சித்திருக்கிறார்.

வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!

பேஸ்புக் பக்கத்தில் பதிவு

பேஸ்புக் பக்கத்தில் பதிவு

தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, என் கை வழியாக எனது ஃபிட்பிட் ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட் உருகியது போல் உணர்ந்தேன். ஃபிட்பிட் பேட்டரியிலிருந்து புகை வெளியே வந்தது, எங்கள் படுக்கையறை முழுதும் தீப்பிடித்தது போல் வாசனை வந்தது என்று கூறியுள்ளார்.

108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

ஃபிட்பிட் நிறுவனத்தின் பதில்

ஃபிட்பிட் நிறுவனத்தின் பதில்

எங்கள் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை, நாங்கள் திரு லேண்டர்ஸின் அறிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் திரு லேண்டர்ஸுடன் பேசியுள்ளோம், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று ஃபிட்பிட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Fitbit Smart Band Explodes On User's Wrist : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X