காசு கொடுத்துறோம் வாட்ச்சை திரும்ப கொடுங்க- விற்பனை செய்த 17 லட்சம் வாட்ச்களை திரும்பப் பெறும் ஃபிட்பிட்!

|

ஃபிட்பிட் நிறுவனம் விற்பனை செய்த 1.7 மில்லியன் அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்களை திரும்பப் பெறுகிறது. இதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்வாட்ச்கள் ஒவ்வொன்றின் மதிப்பு

ஸ்மார்ட்வாட்ச்கள் ஒவ்வொன்றின் மதிப்பு

ஃபிட்பிட் நிறுவனம் தைவானில் 2020 இல் உற்பத்தி செய்து நிறுத்திய ஸ்மார்ட்வாட்ச்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் $299 ஆகும். ஃபிட்பிட் நிறுவனம் புதன் கிழமையன்று 1.7 மில்லியன் ஐயோனிக் ஸ்மார்ட்வாட்ச்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பேட்டரிகள் வெப்பமடைந்து தீப்படிக்கும் அபாயம் இருக்கிறது எனவும் இதனால் அணிந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாலும் ஃபிட்பிட் நிறுவனம் விற்பனை செய்த வாட்ச்களை திரும்பப் பெறுகிறது.

1.7 மில்லியன் அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்கள்

1.7 மில்லியன் அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்கள்

ஃபிட்பிட் நிறுவனம் விற்பனை செய்த 1.7 மில்லியன் அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்களை திரும்பப் பெறுகிறது. இதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஃபிட்பிட் நிறுவனம் அறிமுகம் செய்த சிறப்பு ஸ்மார்ட் வாட்ச்களில் வாக்கிங் தொலைவு, எத்தனை அடிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது, உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அணுகல் ஆதரவு இருக்கிறது. ஃபிட்பிட் நிறுவனம் விற்பனை செய்த 17 லட்சம் வாட்ச்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 10 லட்சம் வாட்ச்களும், பிற நாடுகளில் 7 லட்சம் வாட்ச்களையும் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஃபிட்பிட் நிறுவனம் விற்பனை செய்த ஸ்மார்ட்வாட்ச்களின் பேட்டரி சூடாகி தீப்பிடித்து வெடித்ததாக அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் புகார்கள் எழத் தொடங்கியது.

அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம்

அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம்

அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம், ஃபிட்பிட் அயோனிக் ஸமார்ட்வாட்ச்கள் குறித்து 100-க்கும் மேற்பட்ட புகார்களை பெற்றதாக குறிப்பிட்டது. பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் ஒரு சில இடங்களில் புகார்கள் எழுந்தன. திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்களை நுகர்வோர்கள் பயன்படுத்த வேண்டாம் என ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி, அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியன் அயோனிக் ஸ்மார்ட்வாட்ச்கள் விற்கப்பட்டுள்ளன எனவும் 693000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களை நாட்டிற்கு வெளியே விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

ஃபிட்பிட் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பில் ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்கியது. இந்த கூட்டுக்கு பிறகு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இயங்கும் பிக்சல் ஸ்மார்ட்வாட்ச்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்

ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்த தகவல் பரவலாக பேசப்பட்டது. அதில் அமெரிக்காவில் உள்ள லோவா என்ற பகுதியில் வசிக்கும் ஈதன் லேண்டர்ஸ் என்பவர் பயன்படுத்தி வந்த பிரபல ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட் மாடலான ஃபிட்பிட் (FitBit) சாதனம் தான் வெடித்துள்ளது. கூகுள் நிறுவனம் அண்மையில் தான் ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது என குறிப்பிடப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் ஸ்மார்ட் பேண்ட் புகைந்து எரியத் துவங்கியுள்ளது. அவர் உறக்கத்தில் தன் கையில் எதோ எறிகிறது என்று உணர்ந்தபோது அவர் ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்டில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டிருக்கிறார். உடனே ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்டை கழற்றி எரிய முயற்சித்திருக்கிறார்.

பேண்ட் உருகியது போல் உணர்ந்ததாக தகவல்

பேண்ட் உருகியது போல் உணர்ந்ததாக தகவல்

தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது, என் கை வழியாக எனது ஃபிட்பிட் ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட் உருகியது போல் உணர்ந்தேன். ஃபிட்பிட் பேட்டரியிலிருந்து புகை வெளியே வந்தது, எங்கள் படுக்கையறை முழுவதும் தீப்பிடித்தது போல் வாசனை வந்தது என்று கூறினார். எங்கள் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை, நாங்கள் திரு. லேண்டர்ஸின் அறிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் திரு.லேண்டர்ஸுடன் பேசியுள்ளோம், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று ஃபிட்பிட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fitbit recalls 17 lakh Smartwatches: Battery OverHeating and Burning Wearers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X