13 ஆண்டாக ஆற்றில் மூழ்கி கிடந்த Camera.! மெமரி கார்டிலிருந்த போட்டோவில் என்ன இருந்தது தெரியுமா?
கொலராடோ ஆற்றில், நீருக்கு அடியில் 13 ஆண்டுகளாக மூழ்கி கிடந்த ஒரு பழைய டிஜிட்டல் கேமராவை ஒரு மீன்பிடி ஆர்வலர் மீட்டெடுத்திருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால், 13 ஆண்டுக்கு பிறகு அந்த கேமராவை ON செய்து அதிலுள்ள படங்களையும் அவர் மீட்டெடுத்திருக்கிறார்.
13 ஆண்டுக்கு முன்னர் அந்த கேமராவில் என்னவெல்லாம் பதிவானது என்பதை, அந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். இதை விட மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த டிஜிட்டல் கேமராவின் உரிமையாளரையும் அந்த நபர் கண்டுபிடித்துவிட்டார். இதை அவர் எப்படி செய்தார் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். அந்த கேமராவில் இருந்து மீட்கப்பட்ட படங்களில் என்ன பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியுமா? வாருங்கள் சொல்கிறோம்.

அனிமாஸ் ஆற்றில் மீன்பிடி பயணத்தை மேற்கொண்ட உள்ளூர் மீனவர் ஒருவரால் இந்த கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு OLYMPUS Stylus Tough 6000 மாடல் டிஜிட்டல் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமராவை 2010 ஆம் ஆண்டு ஒரு பெண்மணி தெரியாமல் ஆற்றில் தவறவிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கேமராவை அந்த மீனவர் ஆழமற்ற நீர்நிலையின் அடிப்பகுதியிலிருந்து கண்டெடுத்துள்ளார்.
கிரேனர் என்ற நபர் தான் இந்த கேமராவை கண்டுபிடித்திருக்கிறார். ஆற்றங்கரையில் இந்த கேமரா மணலுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார், அது கரடுமுரடான வடிவத்தில் இருந்தது என்றும், அதில் எந்த தகவலும் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கருதியிருக்கிறார். நீரில் மூழ்கி கிடந்த கேமரா மோசமாக சேதமடைந்திருப்பதை நம்மால் புகைப்படங்களில் காண முடிகிறது. இருப்பினும், அவருடைய மனம் கேமராவை ON செய்ய சொல்லியுள்ளது.

ஆனால், கேமரா ஆன் ஆகவில்லை. காரணம், அதன் பேட்டரி நீரினால் மொத்தமாக வீணாகிவிட்டது. இருப்பினும், அவர் மெமரி கார்ட் ஸ்லாட்டை திறக்க முயன்றிருக்கிறார். அதைத் திறந்த போது முதலில் நீர் தான் வெளியில் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்துள்ளது. பிறகு மெமரி கார்டை எடுத்து, உலர வைத்த பின்பு அதை அவருடைய சிஸ்டமில் சொருகி செக் செய்திருக்கிறார். மெமரி கார்டை சோதனை செய்த போது அவர் அதிர்ந்துபோனார்.
2010 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ அப்படியே இருப்பதை அவர் கண்டு ஆச்சரியத்தில் திகைத்துப் போனார். பிறகு அந்த புகைப்படங்களை, அவரின் சமூக வலைத்தள கணக்கில் போஸ்ட் செய்து, இந்த புகைப்படங்களில் இருப்பவர்களை உங்களில் யாருக்காவது அடையாளம் தெரியுமா என்று போஸ்ட் செய்து, இந்த கேமராவின் சொந்தக்காரரைத் தேடி இருக்கிறார் அந்த மீனவர்.

பிறகு ஒரு வழியாக, இந்த டிஜிட்டல் கேமராவின் உரிமையாளரை சமூக தளவாசிகள் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர். இறுதியாக, அந்த கேமராவில் இருந்த புகைப்படங்களுடன் அந்த கேமரா அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மீனவர் தெரிவித்துள்ளார். அந்த கேமராவில் ஒரு திருமண விழாவின் புகைப்படங்கள், விடுமுறை நாளில் எடுத்த புகைப்படங்கள், செல்லப்பிராணி குட்டியிட்ட தருணம் என்று பல மறக்க முடியாத நினைவுகளைக் கொண்ட படங்கள் இருந்துள்ளது.
அந்த மீனவரின் முயற்சியை, ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் பாராட்டி வருகிறது. குப்பை என்று தூக்கிப் போடாமல், அதில் இருக்கும் புகைப்படங்களை மீட்டெடுத்து, 13 ஆண்டுகளாக நீரில் மூழ்கி கிடந்த அந்த கேமராவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பெருமைக்குச் சொந்தக்காரராக அந்த மீனவருக்குப் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








