100 வயதை தாண்டிய 'வாழும் டைனோசர்' என்று இணையத்தை கலக்கிய வீடியோ.. இது டைனோசர் காலத்து மீனா?

|

'ஜுராசிக் பார்க்' போன்ற திரைப்படங்கள் உங்கள் கற்பனைகளைத் தூண்டி, இன்றைய உலகில் அவற்றின் இருப்பைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டினால், இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கானது தான். அப்படி ஒரு வாழும் டைனோசர் இப்போது நம்முடன் கடலில் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள், கடல் அசுரன் அல்லது 100 வயது தாண்டிய காட்ஜில்லா போன்ற உயிரினம் உங்களைக் கடந்து செல்வது உண்மையில் சிலிர்ப்பாக இருக்கலாம்? அப்படியான காட்சி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

10.5 அடி நீளமுள்ள இராட்சஸ மீன் 'வாழும் டைனோசரா'?

10.5 அடி நீளமுள்ள இராட்சஸ மீன் 'வாழும் டைனோசரா'?

வாழும் டைனோசர் என்ற தலைப்புடன் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் வீடியோ பதிவைப் பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு மீனவர், தான் மீன்பிடிக்கச் சென்ற போது பழங்கால டைனோசரைப் போன்ற ஒரு மாபெரும் உயிரினத்தைப் பிடித்ததாக அந்த வீடியோ ஆதாரம் காட்டுகிறது. டைம்ஸ் நவ்வின் அறிக்கையின்படி, சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10.5 அடி நீளமுள்ள
இராட்சஸ மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மீனவரிடம் சிக்கிய மிகப்பெரிய மீனின் வீடியோ

கனேடிய மீனவரிடம் சிக்கிய மிகப்பெரிய மீனின் வீடியோ

கனேடிய மீனவரான Yves Bisson என்பவர் தான் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள நன்னீர் ஆற்றில் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனை அந்த மீனவர் 'வாழும் டைனோசர்' என்று அழைக்கிறார். இந்த ராட்சஸ மீனை வாழும் டைனோசர் என்று கூறுவதற்கான சரியான காரணம் ஒன்று உள்ளது. அதைப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்த சம்பவம் யவ்ஸின் மீன்பிடி கூட்டாளரால் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது மற்றும் கிளிப் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலானது.

இந்த 8 விஷயத்தை ஒருபோதும் செய்யதீர்.. இல்லையெனில் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம் செய்யப்படும்.. என்னென்ன தெரியுமா?இந்த 8 விஷயத்தை ஒருபோதும் செய்யதீர்.. இல்லையெனில் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம் செய்யப்படும்.. என்னென்ன தெரியுமா?

600 பவுண்டு எடை கொண்ட மீனா?

600 பவுண்டு எடை கொண்ட மீனா?

இவர் பிடித்த இந்த மீனின் பெயர் ஸ்டர்ஜன் ஆகும். அந்த மீனவர் தன்னை தானே 'ஸ்டர்ஜன் வழிகாட்டி' என்று அழைத்துக் கொள்கிறார். இது தான் இதுவரை அவர் கண்டிராத மிகப்பெரிய ஸ்டர்ஜன் வகை மீன்களில் ஒன்றாகும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். காணொளியில், பாரிய நன்னீர் மீனின் தலையை கடலை நோக்கி வழிநடத்த மீனவர் போராடுவதை நாம் காண முடிகிறது. மேலும் வீடியோவில் அவர், "இதைப் பாருங்கள், இந்த மீன் 10.5 அடி நீளமும், அநேகமாக 500 அல்லது 600 பவுண்டுகள் எடை இருக்கும்" என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்டர்ஜன் மீன் பிடிபட்டது

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்டர்ஜன் மீன் பிடிபட்டது

ராஜீவ் என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவின் தலைப்பு, "கனடாவில் 250 கிலோ ஸ்டர்ஜன் பிடிபட்டது. ராட்சதர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிடிக்கப்பட்டு, அளவிடப்பட்டு, RFID டேக் குறியிடப்பட்டு, விடுவிக்கப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மீன் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டர்ஜன் மீன் நிபுணர் யவ்ஸ், இந்த உயிரினம் கனடாவின் ஃப்ரேசர் ஆற்றில் வாழ்கிறது என்றும், இந்த மிருகம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மீனா இது?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மீனா இது?

மீன் பிடிக்கப்பட்டு அளவிடப்பட்ட பிறகு, மீன்பிடி நிபுணர்கள் அதற்கு RFID சிப்பில் குறியிட்ட பிறகு ராட்சஸ ஸ்டர்ஜனை மீண்டும் ஆற்றில் விடுவித்தனர். இதை வாழும் டைனோசர் என்று குறிப்பிடப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், இந்த ஸ்டர்ஜன் மீன் ட்ரயாசிக் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது சுமார் 208 முதல் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புதை படிவ பதிவில் முதல் முறையாகத் தோன்றிய இந்த பழமையான மீன்களின் 29 இனங்கள் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் டைனோசர் காலத்து மீனின் உண்மை

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் டைனோசர் காலத்து மீனின் உண்மை

இந்த மீன் வகையின் பொதுவான பெயர் தான் ஸ்டர்ஜன் என்பது குறிப்பிடத்தக்கது. டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த ஸ்டர்ஜன் மீன் இனம் டைனோசர் காலத்திற்கு பிறகும், பின் இப்போது வரையிலும் எந்தவிதமான பரிணாம வளர்ச்சியையும் இந்த மீன் குறிப்பிடத்தக்க வகையில் எந்த மாற்றங்களையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் இப்போதும் இந்த ஸ்டர்ஜன் மீன் ஒரு வாழும் டைனோசர் என்று குறிப்பிடப்படுகிறது.

WhatsApp டிப்ஸ்: டெலீட் செய்யப்பட்ட சாட்களை எப்படி மீண்டும் பெறுவது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..WhatsApp டிப்ஸ்: டெலீட் செய்யப்பட்ட சாட்களை எப்படி மீண்டும் பெறுவது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ஆபத்தை விளைவிக்கும் டைனோசர் போன்றதா இது? அல்லது சாந்தமானதா?

என்னதான் இந்த ஸ்டர்ஜன் மீனை நாம் வாழும் டைனோசர் என்று குறிப்பிட்டாலும், இவை கூர்மையான பற்கள் கொண்ட, வேட்டையாடும் திறன் கொண்ட ஆபத்தை விளைவிக்கும் டைனோசர்கள் போன்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது. நன்னீரில் வாழும் இந்த ராட்சஸ மீன் இனத்திற்குக் கூர்மையான பற்களே கிடையாது என்பது தான் உண்மை. இந்த நீர் வாழ் அனாக்ரோனிசங்கள் பற்களற்ற வாயைக் கொண்டுள்ளன, மேலும் அவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக அறியப்படவில்லை.

பூமியின் மிக அரிதான உயிரினம்

பூமியின் மிக அரிதான உயிரினம்

சராசரியாக, ஒரு ஸ்டர்ஜன் மீன் சுமார் 7 அடி முதல் 10 அடி அளவு வரை வளரும் திறன் கொண்டவை. ஆனால் பிரிட்டானிகாவின் கூற்றுப்படி, 26 அடிக்கும் அதிகமான அரிதான ஸ்டர்ஜன் மாதிரிகள் காணப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத இந்த உயிரினம் உண்மையில் அரிதானது என்று அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Fisherman Catches Colossal 10 Feet Long Living Dinosaur Possibly Over 100 Years Old : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X