வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட மீன் வீடியோ: வைரல்.!
இப்போது சமூகவலைத்தளத்தை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு, சினிமா மற்றும் முக்கியமான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த வலைத்தளங்கள் மூலம் எளிமையாக
நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.

ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்
அதன்படி இந்தியாவில் தற்போது ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளங்கள் முக்கியமான தகவல்களை தெரியப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

திடீரென வைரல் ஆகும்
தற்போது இணையத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போதுவேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், இணையத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி
அதன்படி இப்போது இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அற்புதமான வீடியோவலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு மீன் ஒன்று ஈல் எனும் விலாங்கு மீனை வேட்டையாடி கொண்டிருக்கிறது. அந்த சமயம் விலாங்கு மீனின் உருவம் மீனை விட மிகப் பெரியதாக இருப்பதால், விலாங்கு மீனை விழுங்க முடியாமல் அந்த மீன் மீண்டும் அதனை வெளியே கக்கியது.
பின்பு வெளியே வந்த விலாங்கு மீன் தனக்கு மீண்டும் உயிர்வந்துவிட்டது என்று நினைத்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. குறிப்பாக இதனை பதிவிட்ட சுசாண்ட நந்தா எனும் ஐ.எப்.எஸ் அதிகாரி இயற்கை அறுபுதமான தருணங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது ட்விட்டரில் வேகமாக வைரலாகும் இந்த வீடியோ ஆனது அதிக லைக்குகளை வாங்கிய வண்ணம் உள்ளது. அதேசமயம் இதுபோன்ற சில வீடியோக்கள் நொடிப்பொழுதில் அனைத்து தளங்களிலும் வைரலாகிவிடுகிறது.


Click it and Unblock the Notifications