Home
News

iQOO-வின் ரியல் சிங்கம்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங். 50MP டெலிஃபோட்டோ கேமராவுடன் புதிய Ultra போன்!

2026 இல் ஐக்யூ (iQOO) நிறுவனம் சற்று வித்தியாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. முதல் முறையாக, இந்நிறுவனம் அதன் பிளாக்ஷிப் நம்பர் சீரிஸில் "அல்ட்ரா" மாடலை சேர்க்கிறது. இந்த மாடல் பெயரின் கீழ் வரும் முதல் ஸ்மார்ட்போன் - ஐக்யூ 15 அல்ட்ராவாக (iQOO 15 Ultra) இருக்கும்.

ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ஒழுங்குமுறை பட்டியல்களில் காணப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கூடுதலாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாகவும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது.

iQOO-வின் ரியல் சிங்கம்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

ஆக ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.85-இன்ச் சாம்சங் எம்14 டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது கர்வ்டு டிஸ்பிளேவை விட பிளாட் ஆன டிஸ்பிளே வழியிலான (கேமிங் மற்றும் டச் அக்யூரஸி மீது) அக்கறை கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இதற்கு மேல், ஐக்யூ அதன் சொந்த க்யூ3 கேமிங் சிப்பையும் பேக் செய்யும். இது கேமிங்கின் போது பிரேம் ரேட் கண்ட்ரோல் மற்றும் பவர் எபிஷியன்ஸி போன்றவற்றை கையாள வேண்டும்.

கேமராக்களை பொறுத்தவரை ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். நிச்சயமாக, இது மட்டுமே ஒரே லென்ஸ் ஆக இருக்காது. ஆனால் மற்ற சென்சார்கள் பற்றிய விவரங்கள் தற்போதைக்கு இல்லை

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 7,000mAh அல்லது அதற்கு மேற்பட்ட பேட்டரி இருக்கும். இது பிளாக்ஷிப் போன்களில் இடம்பெறும் மிகப்பெரிய பேட்டரி ஆக இருக்கலாம். இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் சில கூடுதல் ஹார்ட்வேர் அம்சங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் பிரத்யேக கேமிங் போன்களில் பார்ப்பது போன்ற ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆக்டிவ் கூலிங் ஃபேன் இருப்பதாக கூறப்படுகிறது. கேம்களில் ஷூட்டிங் அல்லது குறிவைக்கும் போது கூடுதல் கட்டுப்பாடுகளுக்கான பிஸிக்கல் ஷோல்டர் பட்டன்களும் இதில் இருக்கும்.

முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே

- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா

- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா

- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா

- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

- 7000எம்ஏஎச் பேட்டரி

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது. இதன் விலை ரூ.79,999 ஆகும். ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஆல்பா (பிளாக்) மற்றும் லெஜண்ட் (ஒயிட்) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Ultra Model in iQOO Flagship Number Series iQOO 15 Ultra Full Specifications leaked before launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X