மொத்த சீனாவையும் சிதறவிட்ட SAMSUNG.. 114-இன்ச் Micro LED TV.. கண்ணாடி போன்ற Transparent டிஸ்பிளே.. என்ன விலை?
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்று கொக்கரிக்கும் படியாக.. சிஇஎஸ் 2024 நிகழ்வில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த சீன தொழில்நுட்ப நிறுவனங்களையும் சிதறவிடும் படியாக.. சாம்சங் (Samsung) நிறுவனம் உலகின் முதல் டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிவியை (World's First Transparent Micro LED TV) அறிமுகம் செய்துள்ளது.
சிஇஎஸ் 2024 (CES 2024) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2204 ஆம் ஆண்டுக்கான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (Consumer Electronics Show) என்பது உலகளவில் நடக்கும் மிகப்பெரிய டெக் ஈவென்ட்களில் ஒன்றாகும். ஜன.9 முதல் ஜன.12 வரை நடக்கவுள்ள இந்நிகழ்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தத்தம் புதிய தயாரிப்புகளை வெளிப்படுத்துவது வழக்கம்.

இதனொரு பகுதியாக தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் உலகின் முதல் டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிவி வரிசையை வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த டிவிகள் ஒரு டிரான்ஸ்ப்ரென்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது முன்பக்கத்தில் இருந்து பார்த்தால். டிவிக்கு பின்பக்கத்தில் இருப்பதை வெளிப்படுத்தும்படியான.. கண்ணாடி போன்ற பேனலை கொண்டுள்ளது.
என்னென்ன அம்சங்கள்? சுவாரசியமாக சாம்சங்கின் இந்த டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிவியானது மொத்தம் 4 வெவ்வேறு அளவுகளில் வருகிறது: 76-இன்ச், 89-இன்ச், 101-இன்ச் மற்றும் 114-இன்ச். இந்த 4 வேரியண்ட்களுமே நம்பமுடியாத அளவிற்கு மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை பெற்றுள்ளன. இவைகள் அனைத்தும் ஒரு சென்டிமீட்டர் அளவிலான தடிமனை மட்டுமே கொண்டுள்ளன.

இந்த ஒட்டுமொத்த டிவியின் டிசைன் ஃப்ளோட்டிங் ஸ்க்ரீனின் மாயையை (Illusion of a floating screen) அதிகரிக்கிறது. கூடவே ஆழமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Immersive viewing experience) வழங்கி நாம் பார்க்கும் கன்டென்ட்டிற்கும், நம்மை சுற்றி உள்ள யதார்த்தத்திற்கும் இடையிலான கோட்டை மங்கலாக்குகிறது.
இந்த டிவியில் உள்ள மைக்ரோ எல்இடிகளின் ஹை பிக்சல் டென்சிட்டியானது (high pixel density) விதிவிலக்கான ஷார்ப்னஸையும், தெளிவையும் வழங்குகிறது. ஒருவேளை மைக்ரோ எல்இடி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாவிட்டால், இது ஒரு படத்தை உருவாக்க மில்லியன் கணக்கான சிறிய எல்இடிகளை பயன்படுத்தும் டிஸ்பிளே தொழில்நுட்பம் (Display Technology) ஆகும்.
இதில் உள்ள ஒவ்வொரு எல்இடியும் சுயமாக ஒளிரும் (Self-illuminating), அதாவது பாரம்பரியமான எல்சிடி (LCD) அல்லது ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேக்களில் இருப்பதை போன்ற பேக்லைட் (Backlight) இதற்கு தேவைப்படாது. இந்த டிவி எப்படி இயங்குகிறது, எப்படி பின்னால் இருப்பதை காட்டுகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.
சாம்சங்கின் இந்த மைக்ரோ எல்இடி பேனல்கள் வெளிப்படையான தன்மையை மட்டுமே வழங்குகிறது என்று சாதாரணமாக எடைபோட்டு விட வேண்டாம். இதுவொரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும். ஏனென்றால் இந்த வடிவமைப்பானது நாம் விரும்பும் எந்த விகிதத்திலும், வடிவத்திலும் அல்லது அளவிலும் ஒரு ஸ்மார்ட் டிவியை உருவாக்க அனுமதிக்கும்.
டிரான்ஸ்ப்ரென்ட் ஓஎல்இடி பேனல்களை (Transparent OLED Panels) விட சாம்சங்கின் டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிஸ்பிளேக்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று - அவற்றின் அதிக ப்ரைட்னஸ் (Higher Brightness) ஆகும். அதாவது இந்த டிஸ்பிளே சுற்றுப்புற ஒளியால் (Ambient light) மிகவும் குறைவாகவே பாதிக்கப்படும்.
என்ன விலை? 110-இன்ச் அளவிலான சாம்சங் நான்-டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிவியின் (110-inch Samsung Non-transparent Micro LED TV) விலை $150,000 ஆக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1,24,68,600 ஆக உள்ளது. ஆக புதிய டிரான்ஸ்ப்ரென்ட் மைக்ரோ எல்இடி டிஸ்பிளேவை கொண்ட டிவி, இதைவிட மிகவும் அதிகமான விலை நிர்ணயத்தையே பெறும்.
அதவாது இந்த புதிய டிஸ்பிளே தொழில்நுட்பத்தின் கீழ் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்கள் - ஆரம்ப கட்டத்தில் - சராசரி நுகர்வோருக்கு உடனடியாக மலிவு விலையில் கிடைக்காத ஒரு பிரீமியம் தயாரிப்பாக இருக்கும். பின்னர் இதே டிஸ்பிளே தொழில்நுட்பம் சற்றே சகஜமான பின்னர் சற்றே மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
Photo Courtesy: Dave Snelling @SnellingD


Click it and Unblock the Notifications








