இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

|

இறக்குமதி செய்யப்படும் கார்கள் மூலமாக டெஸ்லா வெற்றிப் பெற முடிந்தால், இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை உருவாக வாய்ப்புள்ளது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் டுவிட் செய்திருந்தார். இதை தொடர்ந்து இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை எப்போது தொடங்கப்படும் என்பது தொடர்பான கேள்விக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அந்த டுவிட்டில் "முதலில் கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதி வழங்கப்படாத எந்த ஒரு இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்லா எதிர்காலத்தில் இந்தியாவில் ஆலையை அமைக்குமா?

மதுசூதன்.வி என்ற டுவிட்டர் பயனர், டெஸ்லாவை பற்றி என்ன? டெஸ்லா எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு ஆலையை அமைக்குமா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதிற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்., முதலில் கார்களை விற்கவும், சர்வீஸ் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்காது என பதிலளித்துள்ளார். மறுபுறம் மற்றொரு பயனர் பிரனஸ் பத்தோல், எலான் மஸ்க்கிடம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஒப்புதல் பயன்பாடு குறித்து அப்டேட் இருக்கிறதா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மஸ்க், அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என பதிலளித்துள்ளார்.

இந்தியாவுக்கு வாருங்கள், உற்பத்தியை தொடங்குங்கள்

இந்தியாவுக்கு வாருங்கள், உற்பத்தியை தொடங்குங்கள்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் டெஸ்லா மின்சார தொழிற்சாலைக்கு முன்னதாகவே வரவேற்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை பார்க்கலாம். டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்க தயாராக இருக்கும்பட்சத்தில், எந்த பிரச்சனையும் அதற்கு இல்லை. இந்தியாவுக்கு வாருங்கள், உற்பத்தியை தொடங்குங்கள் இந்தியா பெரிய சந்தை... மேலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில், அந்த நிறுவனத்துக்கு பலன் கிடைக்கும் எனவும் சீனாவில் இருந்து கார்களை இறக்குமதி செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக இறக்குமதி வரிகள்

அதிக இறக்குமதி வரிகள்

இந்தியாவில் அதிக இறக்குமதி வரிகள் இருப்பதாக மஸ்க் டுவிட் செய்திருக்கிறார். மின்சார கார் வரிகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் எங்கள் கார்களை வாங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்தாண்டு தொடக்கத்தில்., இந்தியாவில் இறக்குமதி கார்கள் வெற்றிப் பெறும் பட்சத்தில் மட்டுமே உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என டுவிட் செய்திருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி

இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி

டெஸ்லா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க், சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்களை இணைப்பதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமியை தனது மின்சார வாகன நிறுவனமான ஆட்டோபைலட் குழுவில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவே ஆட்டோ பைலட் குழு என குறிப்பிடப்பட்டது. டெஸ்லாவில் சேருவதற்கு முன் அசோக் எல்லுசுவாமி, வோல்க்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு தொடங்குவதாக டுவிட்டரில் குறிப்பிட்ட எலான் மஸ்க் முதலில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர் அசோக்! என தெரிவித்தார். டெஸ்லாவின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ பைலட் குழு என்பது தாமாக இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் தலைமை தாங்கி குழுவை வழி நடத்துவார் என மஸ்க் குறிப்பிட்டார். அசோக் ஆட்டோபைலட் இன்ஜினியரிங் தலைவர் என அவர் குறிப்பிட்டார்.

ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பு

ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பு

டெஸ்லாவில் இணைவதற்கு முன்பு எல்லுஸ்வாமி, வோக்ஸ்வாகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்பட்டார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறார். மேலும் கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார்.

Best Mobiles in India

English summary
First to Sell and Service Cars: Elon Musk Puts Condition For Tesla Plant in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X