வெறும் ரூ.10,000-க்கு 11GB RAM, 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி! வேற என்ன வேணும்?

|

கொஞ்சம் பெரிய டிஸ்பிளே, ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் அளவிலான பேட்டரி, போதுமான ஸ்டோரேஜ், "ஓகே!" என்று சொல்லும்படியான டிசைன் - இதை தவிர்த்து ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் பெரிதாக என்ன எதிர்பார்த்துவிட முடியும் என்கிற எண்ணம் - நேற்றுவரை - எங்களுக்கும் இருந்தது. ஆனால் இன்று இல்லை!

இனிமேல் ரூ.10,000-க்கு இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம்!

இனிமேல் ரூ.10,000-க்கு இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம்!

ஏனென்றால், வருகிற ஜூலை 18 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது 11ஜிபி அளவிலான மொத்த RAM, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.6-இன்ச் அளவிலான டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஹீலியோ ஜி7 ப்ராசஸர் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

அதுவும் ரூ.10,000-க்குள் என்கிற விலையில்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஜூலை 18 அன்று அறிமுகமான பின்னர் எப்போது முதல், எதன் வழியாக விற்பனைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 "மாற்று" ஸ்மார்ட்போன்கள்!

ரியல்மியும் இல்ல.. ரெட்மியும் இல்ல.. இது வேற!

ரியல்மியும் இல்ல.. ரெட்மியும் இல்ல.. இது வேற!

நாம் இங்கே பேசும் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் - டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9) ஆகும். ஆரம்பத்தில் டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வடிக்கையாளர்களால் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் இந்நிறுவனத்தின் ஸ்பார்க் (Spark) மற்றும் கேமன் (Camon) சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் டெக்னோ நிறுவனத்தின் "தலை எழுத்தை" வேறு மாதிரி மாற்றி எழுத உதவின என்பதும் உண்மையே!

அந்த பட்டியலில் சேரும் - டெக்னோ ஸ்பார்க் 9!

அந்த பட்டியலில் சேரும் - டெக்னோ ஸ்பார்க் 9!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்பார்க் சீரீஸை விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ் டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.

டெக்னோ நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கம் வழியாக ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை (ஜூலை 18) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!

ரூ.10கே பட்ஜெட்டில் வரும் முதல் 11ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்!

ரூ.10கே பட்ஜெட்டில் வரும் முதல் 11ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனின் 'மைக்ரோசைட்' அமேசான் இந்தியா வலைதளத்தில் 'லைவ்' ஆகி உள்ளது.

ஆக அறிமுகத்திற்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் சரியான விற்பனை தேதி எதுவும் குறிப்பிடப்பவில்லை; இது அறிமுகமான வேகத்தில் விற்பனையை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமேசானின் இந்த லிஸ்டிங், டெக்னோ ஸ்பார்க் 9 ஆனது ரூ.10,000 என்கிற விலை வரம்பில் 11ஜிபி ரேம்-ஐ கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

11ஜிபி என்றால் 6ஜிபி + 5ஜிபி ஆகும்!

11ஜிபி என்றால் 6ஜிபி + 5ஜிபி ஆகும்!

அதாவது 11 ஜிபி என்கிற ரேம் ஆனது ஸ்மார்ட்போனில் உள்ள Virtual RAM-ஐ சேர்த்த பிறகு வரும் மொத்தம் ரேம் ஆகும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி அளவிலான "வழக்கமான" ரேம் மற்றும் 5ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம் அணுக கிடைக்கும். இது இரண்டும் சேர ஸ்மார்ட்போனின் மொத்த ரேம் 11ஜிபி ஆக மாறும்.

அறியாதோர்களுக்கு 'விர்ச்சுவல் ரேம்' என்றால் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து குறிப்பிட்ட சில ஜிபி-களை "கடனாக" வாங்கும் ஒரு அம்சம் ஆகும்.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

டிசைன் மற்றும் டிஸ்பிளே:

டிசைன் மற்றும் டிஸ்பிளே:

அமேசானில் வெளியாகி உள்ள டெக்னோ ஸ்பார்க் 9 மைக்ரோசைட் ஆனது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த டிசனையும் எந்த மறைதிரையும் இல்லாமல் வெளிப்படுத்தி உள்ளது. இதை ஒரு ரூ.10,000 பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்!

அம்சங்களை பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் 9-இல் 6.6 இன்ச் அளவிலான வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெறும். இது ஒரு HD+ பேனலாக இருக்கும். மேலும் இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் வழங்கும்.

கேமரா, ப்ராசஸர் எல்லாம் எப்படி?

கேமரா, ப்ராசஸர் எல்லாம் எப்படி?

டெக்னோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்பது மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, துல்லியமான கேமரா ஸ்பெக்ஸ் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும் கேமரா மாட்யூலுக்கு அருகில், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. அது கேமராக்களுக்காக ஒதுக்கப்பட்ட டிசைனிலேயே (வலது கீழ் பக்கத்தில்) உட்பொதிக்கப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது MediaTek Helio G37 Octa-core SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இது தவிர்த்து டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 12 OS உடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?

ஸ்கை மிரர் கலரில் சும்மா பளபளன்னு இருக்கு!

ஸ்கை மிரர் கலரில் சும்மா பளபளன்னு இருக்கு!

இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் விற்பனை செய்யப்படும்.

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஸ்கை மிரர் மற்றும் இன்ஃபினிட்டி பிளாக் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த மேலதிக விவரங்களை அறிமுக தினத்தன்று (ஜூலை 18) பகிர்கிறோம்.

Photo Courtesy: Amazon India, Tecno

Best Mobiles in India

English summary
Tecno New Budget Smartphone Under Rs 10000 Spark 9 with 11GB of Total RAM all set to launch in India on July 18

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X