ஸ்மார்ட் வாட்ச் கதை முடிஞ்சுது! உடல் சூடு, இதய துடிப்பு மானிட்டர் உடன் Boat ஸ்மார்ட் ரிங் அறிமுகம்! என்ன விலை?
ஸ்மார்ட் வியர்பிள் (Smart Wearable) சந்தையானது புதிய வகை ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் பேண்டுகள் மற்றும் ஹைப்ரிட் வாட்ச்களின் அறிமுகத்தால் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, போட் (boAT) நிறுவனமானது அதன் முதல் ஸ்மார்ட் ரிங்-ஐ (Smart Ring) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
போட் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது மிகவும் ஸ்டைலான பீங்கான் மற்றும் உலோக வடிவமைப்பை பெற்றுள்ளது. கூடவே இது ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 ட்ராக்கர், ஸ்லீப் டிராக்கர் போன்ற உடல்நல கண்காணிப்பு அம்சங்களையும் (Health Monitoring Features) தன்வசம் கொண்டுள்ளது.

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்: நேர்த்தியான மற்றும் ஸ்டைலான மோதிர வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆனது எந்த ஆடைக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பீங்கான் மற்றும் உலோகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது; அதாவது இது மிகவும் உறுதியானதாக இருக்கும்.
கூடுதலாக இந்த ஸ்மார்ட் ரிங் 5ஏடிஎம் நீர் மற்றும் வியர்வை எதிர்ப்புடீ திறனுடன் வருகிறது. அதாவது இது எந்தவொரு தினசரி செயல்பாடுகளுக்கும் தடையாக இருக்காது என்று அர்த்தம். இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆனது பில்ட்-இன் ஆக்டிவிட்டி ட்ராக்கரை (Activity tracking built-in) கொண்டுள்ளது. அதாவது இது ஸ்டெப்ஸ், டிஸ்டன்ஸ் கவர்டு, பேர்ன்டு கலோரிஸ் மற்றும் பலவற்றை கண்காணிக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது பயனர்களின் தினசரி செயல்பாட்டு இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய உதவுகிறது. மேலும் உடற்பயிற்சியின் போது இருதய ஆரோக்கியம் மற்றும் இதய துடிப்பை கண்காணிக்க உதாஹவும் ஹார்ட் ரேட் மானிட்டரும் இந்த ஸ்மார்ட் ரிங்கில் உள்ளது.
போட் ஸ்மார்ட் ரிங்கில் ஒரு ஸ்லீப் டிராக்கரும் உள்ளது, இது ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஸ்மார்ட்போனை விட சிறப்பாக செயல்படுகிறது என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட் ரிங்கால் உங்கள் தூக்கத்தின் காலம், முறை, பல்வேறு தூக்க நிலைகள் மற்றும் தூக்கக் கலக்கம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
மற்ற ஹெல்த்-ட்ராக்கிங் அம்சங்களை பொறுத்தவரை, ஆக்ஸிஜன்அளவை கணக்கிடும் எஸ்பிஓ2 மானிட்டர் மற்றும் உடல் வெப்பநிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. பெண் பயனர்களுக்கு - மாதவிடாய் காலம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் நினைவூட்டல்கள், சுழற்சிகளை கணிக்க மற்றும் கண்காணிக்கும் அம்சமும் இதில் உள்ளது .
ஸ்மார்ட் வாட்சுகளை போலவே போட் ஸ்மார்ட் ரிங்கும் ஸ்மார்ட்போன் கம்பானியன் ஆப் உடன் வருகிறது, இது ஸ்மார்ட் ரிங்கின் அனைத்து புள்ளிவிவரங்களையும் காட்சிப்படுத்தும். கடைசியாக, போட் ஸ்மார்ட் ரிங் ஆனது ஸ்மார்ட் டச் கன்ட்ரோலுடன் (Smart Touch Control) வருகிறது, இது இணக்கமான டிவைஸ்களுடன் சிங்கிள் ஹேண்டட் மூவ்மென்ட்ஸ் (Single-Handed Movements) மற்றும் கெஸ்டர் கண்ட்ரோலை (Gesture control) ஆதரிக்கும்.
போட் ஸ்மார்ட் ரிங் விலை & விற்பனை: போட் ஸ்மார்ட் ரிங் ஆனது அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரிங்கின் விற்பனை தேதி மற்றும் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, வரும் நாட்களில் இது தொடர்பான விவரங்கள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








