இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. 3 போன்கள், முதல் ரிங், XR ஹெட்செட் அறிமுகம்.. Samsung-ன் ருத்ர தாண்டவம்!
2024 ஆம் ஆண்டிற்கான, சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வானது எப்போது நடக்கும் என்கிற தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது எப்போது நடக்கும்? குறிப்பிட்ட நிகழ்வில் என்னென்ன புதிய சாம்சங் தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்? இதோ விவரங்கள்:
எப்போது நடக்கும்? சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2024 (Samsung Galaxy Unpacked Event 2024) ஆனது வருகிற ஜூலை மாத தொடக்கத்தில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜூலை 10 ஆம் தேதி நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

என்னென்ன அறிமுகமாகும்? இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரசியமாக இந்த ஆண்டு, சாம்சங் நிறுவனமானது 3 ஃபோல்டபிள் போன்களை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 2 மாடல்கள் மட்டுமே வெளியாகும். ஆனால் இந்தாண்டு, கிளாம்ஷெல்-பாணியில் (Clamshell-style) மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் சேர்த்து புக்-ஸ்டைல் பாணியில் (Book-style) மடிக்கக்கூடிய 2 கேலக்ஸி இசட் ஃபோல்ட் மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதில் ஒன்று கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 அல்ட்ரா (Galaxy Z Fold 6 Ultra) என்று அழைக்கப்படலாம். இது டாப் க்ளாஸ் ஹார்டுவேர் அப்டேட்ஸ் (Hardware upgrades) உடன் சாம்சங் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த (Higher price tag) ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் - இந்த ஸ்மார்ட்போன் சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்படாமல் கூட போகலாம்!
உடனே.. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், புதிதாக 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் என்கிற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ரிங் (Galaxy Ring) ஒன்றையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி ரிங்கை பொறுத்தவரை, இது ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களுடன் (Fitness Tracking Featutes) சாம்சங்கின் முதல் மினியேச்சர் வியரிபிள் (Samsung's First Miniature Wearable) ஆக இருக்கும். இந்த ஆண்டு நடந்த முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், கேலக்ஸி எஸ்24 சீரீஸின் (Galaxy S24 Series) அறிமுகத்திற்கு பின்னர் டீஸ் செய்யப்பட்ட இந்த கேலக்ஸி ரிங் ஆனது ஒருவழியாக அறிமுகத்தை சந்திக்க தயாராக இருப்பது போல் தெரிகிறது.
புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் முதல் ஸ்மார்ட் ரிங் உடன் சேர்த்து சாம்சங் நிறுவனமானது அதன் புதிய கேலக்ஸி வாட்ச் 7 சீரீஸ் (Galaxy Watch 7 Series) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 சீரீஸ் (Galaxy Tab S10 Series) போன்றவைகளையும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றை விட முக்கியமாக அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், சாம்சங் நிறுவனமானது எக்ஸ்ஆர் (XR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதன் முதல் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஹெட்செட் குறித்த தகவல்களை வெளியிடலாம். இது சாம்சங் கேலக்ஸி எக்ஸ்ஆர் (Samsung Galaxy XR) என்று அழைக்கப்படலாம் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி இது ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹைபிரிட் ரியாலிட்டி ஹெட்செட்டுக்கு (Apple Vision Pro mixed reality headset) போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








