Snapdragon 7+ Gen2 சிப்செட்டுடன் வரும் முதல் Redmi Turbo போன்! பேருல மட்டும் Turbo இல்லை செயல்லையும் தான்!
ரெட்மி (Redmi) நிறுவனம், தொடர்ந்து சில காலமாக பட்ஜெட் விலை சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சாதனம் தான் Redmi Note 12 Turbo மொபைல். பட்ஜெட்டில் 5ஜி உடன் இது இயங்குகிறது.
ரெட்மி அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய போன் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. Redmi Note 12 Turbo என்ற பெயரில் நிறுவனம் இந்த போனை வரும் மார்ச் 28 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு சீனாவில் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய Redmi Note 12 Turbo சாதனம் ரெட்மி பிராண்டின் Note 12 வரிசைக்கு ஒரு புதிய கூடுதலாக சேர்க்கப்படுகிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தகவலின் படி, இது குவால்காம் நிறுவனத்தால் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Qualcomm Snapdragon 7+ Gen2 சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, Redmi Note 12 Turbo டிவைஸ் Geekbench இல் 23049RAD8C என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. மாடல் எண்ணின் முடிவில் உள்ள C என்பது சீனா வேரியண்ட்டைக் குறிக்கிறது.
Redmi Note 12 Turbo சாதனம் Geekbench 6.0 பட்டியலானது, சிங்கிள்-கோர் சுற்றில் 1484 புள்ளிகளையும், மல்டி-கோர் பிரிவில் 4257 புள்ளிகளையும் இந்த போன் பெற்றுள்ளது. பட்ஜெட் விலை போன்களின் பொதுவான மதிப்பெண்களை வைத்து பார்க்கையில்,இந்த மதிப்பெண்கள் உண்மையில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். இந்த மதிப்பீட்டுடன் Redmi Note 12 Turbo போனின் சில சிறப்பம்ச விபரங்களையும் பட்டியல் காண்பிக்கிறது.
முதலாவதாக, Redmi Note 12 Turbo போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்குகிறது. இது MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Redmi Note 12 Turbo சாதனத்தின் மதர்போர்டு பிரிவில் 2.92GHz பீக் கிளாக் ஸ்பீட் உடன் Snapdragon 7+ Gen2 ஆக்டா கோர் சிப்செட் உடன் 'மார்பிள்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிப்செட் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரேம் விருப்பமும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. Redmi Note 12 Turbo ஆனது 6.67' இன்ச் கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை பெறுகிறது. இதன் டிஸ்பிளே செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வருகிறது. இது குறுகிய பெசல்களுடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது.
அட்ரினோ GPU உடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 7+ Gen2 SoC மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது என்பதே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். பட்ஜெட் போன்களில் சக்தி வாய்ந்த சிப்செட் ஆக இது இடம்பெறுகிறது. Redmi Note 12 Turbo சாதனம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
கேமரா பற்றி பேசுகையில், Redmi Note 12 Turbo ஆனது 50MP ப்ரைமரி சென்சார், 8MP செகண்டரி ஷூட்டர் மற்றும் 2MP மூன்றாம் லென்ஸுடன் வரும் என்று கூறப்படுகிறது. இணைப்பு அம்சங்களில் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதன் விலை ரூ.15,000 முதல் ரூ.19,999-க்குள் அமையும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








