Home
News

பக்கா சவுண்ட்.. ரூ.1000 பட்ஜெட்ல POCO-வின் முதல் TWS பட்ஸ்.. அறிவிச்ச வேகத்துல ஆர்டர் சும்மா அள்ளுது!

கேட்பவர்களை வாய்பிளக்க வைக்கும் விலை நிர்ணயத்தின் கீழ்.. போக்கோவின் முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் (True Wireless Stereo Earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ பாட்ஸ் (POCO Pods) என்று அழைக்கப்படும் இந்த இயர்பட்ஸின் விலை மற்றும் அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

போக்கோ பாட்ஸ் அம்சங்கள்: போக்கோவின் இந்த முதல் இயர்பட்ஸ் ஆனது பக்காவான சவுண்ட்-ஐ வழங்குவதற்காக 12மிமீ ட்ரைவர் யூனிட்டை (12mm Driver Unit) கொண்டுள்ளது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த இயர்பட்ஸ் டைனமிக் ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை (Dynamic audio experience) வழங்கும்.

ரூ.1000 பட்ஜெட்ல POCO-வின் முதல் TWS பட்ஸ்!

மேலும் போக்கோவின் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 60எம்எஸ் வரையிலான லோ லேட்டன்சி மோட் (Low latency mode of up to 60ms) உடன் வருகின்றன. போக்கோ பாட்ஸ் ஆனது ப்ளூடூத் 5.3 வெர்ஷனை (Bluetooth 5.3 Version) ஆதரிக்கிறது மற்றும் கூகுள் பாஸ்ட் பேர் (Google Fast Pair) செயல்பாட்டுடனும் வருகிறது.

அறியாதோர்க்கு கூகுள் ஃபாஸ்ட் பேர் என்பது ஓரே டேப்பில் (Single tap) உங்கள் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்க உதவும் ஒரு அம்சமாகும். இதுதவிர்த்து, போக்கோ பாட்ஸ் ஆனது என்விரான்மென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடனும் (Environment noise cancellation feature) வருகிறது.

போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுற்றுப்புறங்களில் உள்ள சத்தத்தை தடுத்து, உங்களுக்கு அதி-தெளிவான ஆடியோ மற்றும் தடையற்ற போன் கால்களை (Crystal-clear audio and uninterrupted Calls) வழங்கும். மேலும் போக்கோ பாட்ஸ் ஆனது ஐபிஎக்ஸ்4 மதிப்பீட்டுடன் (IPX4 Rating) வருகிறது, இது வியர்வை மற்றும் நீர் தெளிப்புகளில் (Sweat and Water Splash) இருந்து இயர்பட்ஸை பாதுகாக்கும்.

மேலும் இந்த போக்கோ இயர்பட்ஸ், இசையை கட்டுப்படுத்தவும் (Music Control), அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் (Call Control) பயன்படுத்தக்கூடிய எளிதான டச் கண்ட்ரோல்களையும் (Touch Controls) வழங்குகின்றன. பேட்டரி லைஃப்பை (Battery Life) பொறுத்தவரை, சார்ஜிங் கேஸுடன் (Charging Case) சேர்த்து இந்த இயர்பட்ஸ் மொத்தம் 30 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது.

பட்ஜெட் விலை டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸாக இருந்தாலும் கூட போக்கோ பாட்ஸ் ஆனது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Fast Charging Support) வருகின்றன. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்களுக்கான மியூசிக் பிளேபேக்கை (Music Playback) அனுபவிக்க முடியும்.

போக்கோ பாட்ஸ் விலை மற்றும் விற்பனை: போக்கோ பாட்ஸ் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் ஆனது ரூ.1,199 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது ஜூலை 29 ஆம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (e-Commerce Website Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். இந்த இயர்பட்ஸ், பிளாக் (Black) மற்றும் யெல்லோ (Yellow) என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும்.

போக்கோ பாட்ஸ் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த போக்கோ இந்தியாவின் (Poco India) தலைவர் ஆன ஹிமான்ஷு டோண்டன் (Himanshu Tondon), "ஒவ்வொரு இந்தியரையும் பிரீமியம் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் நோக்குடன், போக்கோ பாட்ஸை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, இந்திய ஏஐஓடி ஸ்பேஸில் (AIoT Space) பெருமையுடன் நுழைகிறோம்." என்று கூறி உள்ளார்.

மேலும் "போக்கோ பாட்ஸ் ஆனது அதிநவீன கண்டுபிடிப்பு (Cutting-edge innovation), தடையற்ற இணைப்பு (Seamless connectivity) மற்றும் ஒப்பிடமுடியாத ஆடியோ செயல்திறன் (Unmatched audio performance) ஆகியவற்றின் ஒரு சரியான இணைவாகும். அசாதாரண அனுபவங்களை வழங்குவதற்கும், எங்கள் பயனர்களுக்கு ஒரு அற்புதமான தொழில்நுட்ப போர்ட்ஃபோலியோவை அறிமுகப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First POCO TWS Earbuds Poco Pods Launched in India For Rs 1199 Flipkart Sale From July 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X