Home
News

விண்வெளியில் படப்பிடிப்பு- நேரடியாக விண்ணுக்கு சென்ற இயக்குனர், நடிகை: வரலாற்றின் முதல் திரைப்படம்!

நடிகை யூலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிபென்கோ மற்றும் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோருடன் சோயுஸ் எம்எஸ்-19 விண்கலம் விண்வெளி நோக்கி பறந்தது. ரஷ்யாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிளிம் ஷிபென்கோ, இவர் தனது திரைப்படத்தை செட் ஏதும் போடாமல் நேரடியாக விண்வெளிக்கு சென்று படமாக்க இருக்கிறார். சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு தி சேலஞ்ச் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் கதை அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்வெளி ஏற்படும் மருத்துவ நெருக்கடியை மையமாக வைத்து இருக்கும் என கூறப்படுகிறது.

சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறந்த படக்குழுவினர்

சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறந்த படக்குழுவினர்

கடந்த ஆண்டு மிஷன் இம்பாசிபிள் நடிகர் டாம் க்ரூஸ், நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஹாலிவுட் திரைப்பட படப்பிடிப்பு திட்டத்தை ரஷ்ய குழு தற்போது செய்து காட்டியிருக்கிறது. நடிகை யூலியா பெரெசில்ட் (37) திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (38) ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறந்தனர்.

விண்வெளியில் 12 நாட்கள் படப்பிடிப்பு

இவர்களை மூத்த விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் விண்ணுக்கு அழைத்து சென்றார். சிறு மாற்றத்தின் காரணமாக குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாகவே விண்வெளிக்கு சென்றுள்ளனர். தி சேலஞ்ச் திரைப்பட காட்சிகள் அங்கு 12 நாட்கள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கு படக் குழுவினர் சோயுஸ் விண்கலம் மூலம் பயணம் செய்தனர். விண்வெளி வீரரை காப்பாற்ற ஐஎஸ்எஸ்-க்கு ஒரு பெண் அனுப்பப்படுகிறார் என்ற காட்சிகள் அங்கு படமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

திரைப்படத்தின் பெயர் தி சேலஞ்ச்

இதுகுறித்து விண்வெளிக்கு சென்று தி சேலஞ்ச் திரைப்பட நடிகை பெரஸில்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தங்களுக்கு பதற்றமாக இருப்பதாகவும் இருவரும் ஒருவருக்கொருவர் ஊக்க வார்த்தை கூறி கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் இதுவரை யாரும் படப்பிடிப்புக்கு விண்கலம் செல்லவில்லை, எந்த விஷயத்துக்கும் முன்னோடியாக இருப்பது கடினம் என்றாலும் அதில் சுவாரஸ்யம் இருக்கத் தான் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ்

ஐஎஸ்எஸ்-க்கு வரவேற்கிறோம் என ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் பட்ஜெட் உட்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விண்வெளி வீரரை காப்பாற்ற ஐஎஸ்எஸ்-க்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணரை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐஎஸ்எஸ்-ல் இருக்கும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்த படத்தில் சிறிய வேடங்களில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 17 அன்று பூமிக்கு திரும்புகின்றனர்

அதேபோல் இந்த கதாபாத்திரத்திற்கு 3000 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இது உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கடினமாக இருந்ததாகவும் இலக்கை அடையும் அனைத்தும் முறியடிக்கப்படும் என திரைப்படத்தின் கதாநாயகி பெரஸில்ட் முன்னதாக தெரிவித்தார். திரைப்பட குழுவினர்கள் அக்டோபர் 17 அன்று பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றியாகும் பட்சத்தில் அடுத்தடுத்து நிகழும் படப்படிப்பு

அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் 190 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்து திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் அடுத்தடுத்து விண்வெளி கதைத்தளம் அமைக்கப்பட்டு படக்குழுவினர் விண்வெளிக்கு செல்லத் தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம்

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Movie Shooting in Space: Actress, Director Reached the International Space Station
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X