Home
News

இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டாம்.. LPG ஏடிஎம் வந்துவிட்டது.. 3 நிமிடத்தில் கேஸ்.. இதோ முழு விவரம்..

பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி இன்றுவரை ஈரானில் போர் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த ஈரான் போரின் மத்தியில் நாடு தழுவிய எல்பிஜி நெருக்கடி உச்சத்தில் இருக்கும் வேலையில் முதல் எல்பிஜி ஏடிஎம் (LPG gas ATM) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதைப் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது வட இந்தியாவில் குருகிராம் (Gurugram) நகர மக்களுக்குத் தான் இந்த முதல் எல்பிஜி ஏடிஎம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் மீண்டும் நிரப்பப்பட்ட சிலிண்டர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி எரிவாயு தீர்ந்துவிடும்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டாம.. LPG ஏடிஎம் வந்துவிட்டது..

தற்போது கொண்டுவரப்பட்ட இந்த ஸ்மார்ட் இயந்திரம் ஆனது சோஹ்னா, செக்டர் 33, சென்ட்ரல் பார்க் ஃப்ளவர் வேலியில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தால் ஒரு முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புது எல்பிஜி இயந்திரம் முற்றிலும் தானியங்கி மற்றும் தொடுதலில்லா முறையில் இயங்கக்கூடியது. வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழைந்து பின்னர் ஓடிபி (OTP) மூலம் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் (யுபிஐ அல்லது கார்டு) பணம் செலுத்த வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் நிரப்பப்பட்ட சிலிண்டர் (cylinders) இயந்திரத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, காலி சிலிண்டர் உள்ளே வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த ஏடிஎம்-இலிருந்து வழங்கப்படும் சிலிண்டர்கள் பாரம்பரிய இரும்பு சிலிண்டர்களிருந்து வேறுபட்டவை. இவை ஃபைபரால் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர்கள் ஆகும். மேலும் இவை எடை குறைந்தவை, சுகாதாரமானவை மற்றும் துருப்பிடிக்காதது என்று கூறப்படுகிறது. பாரம்பரிய சிலிண்டர்கள் சுமார் 31 கிலோ எடை கொண்டவையாக உள்ளது. ஆனால் இந்த புதிய சிலிண்டர் தோராயமாக 15 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே இதைத் தூக்குவது மிகவும் எளிதானது. மேலும் இதில் ஒளிபுகும் வடிவமைப்பு இருப்பதால் எரிவாயுவின் அளவைக் காணவும் முடியும்.

குறிப்பாக இந்த புதிய இயந்திரத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், இது 24 மணி நேரமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே தான் சிலிண்டர் விநியோக நேரத்திற்காக நீங்கள் இனி காத்திருக்க வேண்டியதில்லை. மேலும் எந்த நேரத்திலும் சென்று சில நிமிடங்களில் ஒரு புதிய சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டாம.. LPG ஏடிஎம் வந்துவிட்டது..

மேலும் இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 10 சிலிண்டர்களை வைத்திருக்கக்கூடிய திறன் கொண்டது மற்றும் கையிருப்பு குறைவாக இருக்கும்போது கேஸ் ஏஜென்சிக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த முயற்சி எரிவாயு கேஸ் விநியோக அமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

அதேபோல் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான சேவையை வழங்குவதே பிபிசிஎல் அமைப்பின் நோக்கம் ஆகும். மேலும் இந்த புதிய முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் பிற நகரங்களிலும் விரைவில் எல்பிஜி ஏடிஎம்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

photos credits: indiatvnews, BPCL

More from GizBot

Best Mobiles in India

English summary
First LPG gas ATM opens in Gurugram, cylinders dispensed in minutes: Here are the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X