ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?

|

இந்த நொடி வரையிலாக.. இருப்பதிலேயே மிகவும் அதிக விலை நிர்ணயம் கொண்ட ஆப்பிள் ஐபோன் மாடல் எதுவென்றால்..?

அது ரூ.1,79,900 க்கு விற்பனை செய்யப்படும் iPhone 13 Pro Max மாடலின் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன் தான் என்று நீங்கள் நினைத்தால்.. தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.. இல்லையென்றாலும் தானாக மாறிவிடும்!

எப்படி மாறும்?

எப்படி மாறும்?

ஏனெனில் ஒரு ஐபோன் மாடல் ஆனது ரூ.28 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவொரு "ஒரிஜினல்" ஐபோன் மாடல் ஆகும்.

என்னது ஒரிஜினல் ஐபோன்-ஆ? அப்போது நாம் வாங்குவதெல்லாம் என்ன போலியான ஐபோன்களா? என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்! ரூ.28 லட்சத்திற்கு அறிமுகமான ஐபோன் மாடல் ரொம்பவே ஸ்பெஷலான ஐபோன் ஆகும்!

ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!

அப்படி என்ன ஸ்பெஷல்?

அப்படி என்ன ஸ்பெஷல்?

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மேக்வேர்ல்ட் மாநாட்டில் அப்போதைய ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தார் அல்லவா?

"அந்த நேரத்தில்" தயாரிக்கப்பட்ட, சீல் கூட பிரிக்காத பாக்ஸில் இருக்கும் "ஒரிஜினல் 2007 ஐபோன்" தான் தற்போது ரூ.28 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது!

அந்த ஒரிஜினல் 2007 மாடல் - ஒரு அப்கிரேட்டட்  ஐபாட் ஆகும்!

அந்த ஒரிஜினல் 2007 மாடல் - ஒரு அப்கிரேட்டட் ஐபாட் ஆகும்!

ஆம்! அந்த நேரத்தில் (2007 ஆம் ஆண்டில்) அறிமுகமான முதல் ஐபோன் ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் "மேம்படுத்தப்பட்ட ஐபாட்" போலவே இருந்தது.

அதாவது, அதில் டச் ஸ்க்ரீன் இருந்தது, 2MP கேமரா இருந்தது மற்றும் வெப் ப்ரவுஸர் உடன் கூடிய மற்ற சில அம்சங்களும் இருந்தது!

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

இருந்தாலும் கூட.. இதுக்கு ரூ.28 லட்சமா?

இருந்தாலும் கூட.. இதுக்கு ரூ.28 லட்சமா?

ஆம்! ZDNet வழியாக வெளியான அறிக்கையின்படி, சீல் செய்யப்பட்ட பாக்ஸிற்குள் உள்ள "திறக்கப்படாத, ஒரிஜினல் மற்றும் முதல் ஜெனரேஷன் 2007 ஐபோன்" ஆனது அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 35,000 அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய மதிப்பின்படி, சுமார் ரூ.28 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

28 லட்சத்திற்கு ஏலம் போன ஐபோனின் அசல் விலை என்ன?

28 லட்சத்திற்கு ஏலம் போன ஐபோனின் அசல் விலை என்ன?

கடந்த 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த ஐபோன் மாடலின் அசல் விலை 499 அமெரிக்க டாலர்கள் (4 ஜிபி ரேம் பேஸிக் வேரியண்ட்) ஆகும் மற்றும் இதன் 8 ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை 599 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அதே ஏலத்தில் கிடைத்த மற்ற பொருட்கள்!

அதே ஏலத்தில் கிடைத்த மற்ற பொருட்கள்!

வெளியான அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 18 அன்று நிறைவடைந்த ஏலத்தில் 70 க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.

அந்த ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்த பொருட்களில் Apple-1 சர்க்யூட் போர்டும் அடங்கும், இது நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன ஸ்டீவ் வோஸ்னியாக்கால் Hand-soldered செய்யப்பட்ட ஒன்றாகும். இது 677,196 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.

விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

இந்த லிஸ்டில் ஒரிஜினல் ஆப்பிள் ஐபாட்டும் உண்டு!

இந்த லிஸ்டில் ஒரிஜினல் ஆப்பிள் ஐபாட்டும் உண்டு!

அதே ஏலத்தில் "திறக்கப்படாத" முதல் ஜெனெரஷன் ஒரிஜினல் ஆப்பிள் ஐபாட் ஒன்றும் (5 ஜிபி) விற்கப்பட்டது. அது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, குபெர்டினோவை தளமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அதன் அடுத்த ஐபோன் மாடல்களை, அதாவது ஐபோன் 14 சீரிஸை அதன் சில மற்ற தயாரிப்புகளுடன் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
First Generation Original 2007 iPhone was sold for Rs 28 lakh

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X