இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. 8.3-inch டிஸ்பிளே கொண்ட iPhone.. எப்போது அறிமுகம்? என்ன விலை?
ஹைடாங் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் ஆன ஜெஃப் பு, அடுத்த 2 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனமானது சில "திடுக்கிட வைக்கும்" வேலைகளை செய்யுமென்று கணித்துள்ளார். அதில் ஐபோன் 17-ன் புதிய 'ஸ்லிம்' மாடல் மற்றும் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோன் ஆகியவைகளின் அறிமுகங்களும் அடங்கும்.
அதிகரித்து வரும் தேவைகளை கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனமானது தனது சொந்த ஃபோல்டபிள் டிவைஸ்களின் வேலையை "விரைவுபடுத்தி உள்ளதாக" ஆய்வாளர் ஜெஃப் பு (Analyst Jeff Pu) கூறுகிறார். முன்னதாக ஆப்பிள் நிறுவனமானது நேரடியாக ஃபோல்டபிள் ஐபோனை (Foldable iPhone) அறிமுகம் செய்யாது.

அதற்கு பதிலாக ஃபோல்டபிள் ஐபாட் (Foldable iPad) அல்லது ஃபோல்டபிள் மேக்புக் (Foldable MacBook) / ஃபோல்டபிள் ஐபாட் ஹைப்ரிட் (Foldable iPad Hybrid) போன்ற தயாரிப்புகளை அறிமுகம் செய்து "ஒருவகையான" சோதனையை நடத்தும். ஏனென்றால், ஆப்பிளின் உலகளாவிய டேப்லெட் சந்தையானது அதன் ஸ்மார்ட்போன் சந்தையில் இல்லாத வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆகையால் ஃபோல்டபிள் டேப்லெட்களை (Foldable Tablets) சோதனை செய்ய இது சரியான "பகுதியாக" இருக்கும்.
இதெல்லாம் எப்போது அறிமுகமாகும்? ஆய்வாளர் ஜெஃப் புவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 20.3-இன்ச் ஃபோல்டபிள் டிவைஸ் (20.3-inch Foldable Device) ஒன்று அறிமுகமாகும் (பெரும்பாலும் இதுவொரு டேப்லெட் மாடலாக இருக்கும்). அதை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் இறுதியில் ஐபோன் ஃபோல்ட் (iPhone Fold) அல்லது ஐபோன் ஃபிளிப் (iPhone Flip) வெளியாகும்.
ஃபோல்டபிள் ஐபோன் மாடல்கள் ஆனது இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று 7.9 இன்ச் இருக்கும் மற்றொன்று 8.3 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதுதவிர்த்து மேற்கண்ட இரண்டு ஐபோன் மாடல்களை பற்றி இப்போதைக்கு அதிக விவரம் இல்லை.
என்ன விலைக்கு வரும்? 20.3-இன்ச் ஃபோல்டபிள் டிவைஸை பொறுத்தவரை, இது "அல்ட்ரா-ஹை-எண்ட் சந்தையை" இலக்காக கொண்ட "ஆப்பிளுக்கான புதிய சீரீஸ்" ஆக இருக்கும் என்று ஆய்வாளர் ஜெஃப் பு கூறுகிறார். பொதுவான ஃபோல்டபிள் டிவைஸ் மற்றும் ஆப்பிளின் பிரீமியம் தயாரிப்புகளின் விலையைக் கருத்தில் கொண்டால் இது.. மடிக்கக்கூடிய பேனலுடன் மேக்புக் ப்ரோவை போன்ற சக்திவாய்ந்த டிவைஸ் ஆக இருக்கும். இது மிகவும் எளிதாக 2,500 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியை எட்டலாம்.
மே 7 நடந்த ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஐபாட் ஏர் 2024 (iPad Air 2024) அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆறாவது தலைமுறை ஐபாட் ஏர் மாடல் ஆனது 10.9 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்பிளே வகைகளில் வாங்க கிடைக்கும். இந்திய விலை நிர்ணயம் ரூ.59,900 முதல் தொடங்கி ரூ.94,900 வரை செல்கிறது.
இதே நிகழ்வில் ஐபாட் ப்ரோ 2024 (iPad Pro (2024) மாடல்களும் அறிமுகமானது. இந்த லேட்டஸ்ட் ஐபாட் ப்ரோ மாடலன் Tandem OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. முந்தைய தலைமுறை ப்ரோ மாடலானது மினி-எல்இடி தொழில்நுட்பத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஐபாட் ப்ரோ 2024 மாடல்கள் ஆனது 11 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்பிளே விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் 2022 மாடலை விட மெலிதான பெசல்களை கொண்டுள்ளது மற்றும் ஆப்பிளின் எம்4 சிப் மூலம் இயக்கப்படுகிறது, கூடவே 2டிபி வரை ஸ்டோரேஜையும் வழங்குகிறது மற்றும் ஜபாட்ஓஎஸ் 17 (iPadOS 17) அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.
விலையை பொறுத்தவரை, இந்தியாவில் ஐபாட் ப்ரோ 2024 மாடலின் 11 இன்ச் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.99,900 க்கும், வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது ரூ.1,19,900 க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள ஐபாட் ப்ரோ 2024 மாடலின் 13 இன்ச் வைஃபை வேரியண்ட் ரூ.1,29,900 க்கும் மற்றும் வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது ரூ.1,49,900 க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








