Home
News

எல்லோரும் ISRO ஆகிட முடியுமா? பாகிஸ்தான் உருவாக்கியுள்ள iCube-Q மிஷன்.. ஆனா ஒரு டிவிஸ்டு!

பாகிஸ்தானின் "சொந்த" சந்திரயானை பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர்.. SUPARCO (சுபர்கோ) என்றால் என்னவென்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் "விஷயம் என்ன" என்பதை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இஸ்ரோ (ISRO) என்பதை போல சுபர்கோ என்பதும் ஒரு சுருக்கமாகும்.

இந்த சுருக்கத்தின் விரிவாக்கம் என்ன? பாகிஸ்தான் ஸ்பேஸ் அண்ட் அப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் கமிஷன் (Pakistan Space & Upper Atmosphere Research Commission) என்பதே ஆகும். அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எப்படி சுருக்கமாக இஸ்ரோ என்று அழைக்கப்படுகிறதோ.. அதேபோல பாக்சிதான் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி ஆணையமானது சுபர்கோ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள iCube-Q மிஷன்.. ஆனா ஒரு டிவிஸ்டு!

அப்படியான சுபர்கோ, இந்தியாவிற்கு போட்டியாக அல்லது இஸ்ரோவை பின்தொடரும் நோக்கத்தின் கீழ் தனது முதல் லூனார் மிஷனை (First Lunar Mission) மே 3 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தவுள்ளது. பாகிஸ்தானின் இந்த முதல் சந்திர கிரக விண்வெளி பயணத்திற்கு ஜக்யூப்-க்யூ மிஷன் (iCube-Q Mission) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது சந்திரனில் தரை இறங்குமா? இல்லை. இதுவரை கிடைத்த தகவலின்படி ஜக்யூப்-க்யூ என்பது ஒரு ஆர்பிட்டர் (Orbiter) ஆகும். இதில் லேண்டர் எதுவும் இல்லை. அதாவது இந்த விண்கலத்தால், நிலவை சுற்றியபடியே ஆய்வுகளை மட்டுமே செய்ய முடியும். இதில் 2 ஆப்டிகல் கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் சந்திர கிரகத்தின் மேற்பரப்புகளை புகைப்படம் எடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள iCube-Q மிஷன்.. ஆனா ஒரு டிவிஸ்டு!

ஜக்யூப்-க்யூ மிஷனில் இன்னொரு டிவிஸ்ட்டும் உள்ளது! பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு வரலாற்று சம்பவமாக இருக்கப்போகும் ஜக்யூப்-க்யூ மிஷன் (China Chang'e-6 Mission) ஆனது சீனாவின் தயவில் தான் விண்வெளிக்குள் செலுத்தப்படவுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பாக்சிதானின் ஜக்யூப்-க்யூ ஆர்பிட்டர் ஆனது சீனாவின் கனவு திட்டமான சேங்-6 மிஷனுடன் சேர்த்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சீனாவின் சேங்-6 விண்கலம் ஆனது தெற்கு மாகாணமான ஹைனானில் உள்ள ஏவுதளத்தில் இருந்து மே 3 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சேங்-6 மிஷன் ஆனது பூமியின் பார்வையில் இருந்து நிரந்தரமாக மறைந்திருக்கும் நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள iCube-Q மிஷன்.. ஆனா ஒரு டிவிஸ்டு!

இது நிலவின் இருண்ட பகுதியில் (Moon's Dark Side) இருந்து சந்திர மாதிரிகளை (Lunar Samples) மீட்டெடுப்பதற்கான முதல் முயற்சியாகும். இதன் மூலம் சந்திரன் மற்றும் உள் சூரிய குடும்பத்தின் ஆரம்பகால பரிணாமம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற முடியும் என்று சீனா நம்புகிறது.

இப்படிப்பட்ட சேங்-6 மிஷனுடன் சேர்த்து தான் பாகிஸ்தானின் ஜக்யூப்-க்யூ மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஜக்யூப்-க்யூ செயற்கைக்கோள் ஆனது சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய விண்வெளி ஆணையமான சுபர்கோ ஆகிய இரண்டின் கூட்டு முயற்ச்சியில் தான், வடிவமைகப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள iCube-Q மிஷன்.. ஆனா ஒரு டிவிஸ்டு!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இஸ்ரோவானது "தான் உண்டு தன் வேலை உண்டு" என்கிற பாணியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே வருகிறது. இன்னும் சில தினங்களில் மிகவும் முக்கியமான ஒரு சோதனையையும் செய்யவுள்ளது. அது ககன்யான் மிஷனின் பாராசூட் சிஸ்டமை சரிபார்க்க உதவும் ஒரு ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை ஆகும்.

இந்த சோதனையின்கீழ், சினூக் ஹெலிகாப்டரில் (Chinook helicopter) இருந்து சுமார் 4 - 5 கிமீ உயரத்தில் இருந்து ககன்யான் மிஷனின் க்ரூ மாட்யூல் (Crew module) பூமியை நோக்கி வீசப்படும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நடத்தப்பட உள்ள இந்த சோதனையின் வழியாக "பெயரளவிலான" நிபந்தனைகளின் கீழ் ககன்யான் மிஷனின் பாராசூட் அமைப்பு சோதிக்கப்படும்.

இந்த சோதனையின் போது 2 பாராசூட்களும் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, க்ரூ மாட்யூலின் ஸ்பிளாஷ் டவுன் செயல்முறை சரியாக நடக்கும் பட்சத்தில், இந்த சோதனை வெற்றி அடையும். ஒருவேளை ஒரு பாராசூட் திறக்காமல் போனால் அல்லது 2 பாராசூட்களும் திறக்கப்படாமல் போனால் அல்லது பாராசூட்களை தாமதப்படுத்தும் சூழ்நிலைகள் ஏதேனும் உருவானால், இந்த சோதனை தோல்வியில் முடிவடையும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
First Ever Lunar Mission of Pakistan ICUBE Q all set to Launch with China Change 6 Mission on May 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X