கொடுத்து வச்ச திருச்சி மக்கள்.. தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டர்.. என்னென்ன அம்சங்கள்? இதோ விவரம்..
தற்போது டிவி, ஸ்மார்ட்போன் என அனைத்து வசதிகளும் வந்துவிட்டாலும், தியேட்டருக்கு சென்று சினிமா அனுபவத்தை ரசிப்பது என்பது எப்போதும் தனி பரவசத்தைத் தரக்கூடியது. இந்நிலையில் திருச்சியில் உள்ள எல்.ஏ சினிமாஸ் தியேட்டரில் டால்பி சினிமா (Dolby Cinema) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது தமிழ்நாட்டின் முதல் டால்பி சினிமா தியேட்டர் (first Dolby Cinema) ஆகும்.
குறிப்பாக இந்தத் திரையரங்கம் திருச்சி (Trichy) மாவட்டத்தின் திருவெறும்பூர் (Thiruverumbur) பகுதியில் அமைந்துள்ள எல்.ஏ. சினிமா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தத் திரையரங்கின் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., திரையரங்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

டூயல் E3LH டால்பி விஷன் ப்ரொஜெக்ஷன் (Dual E3LH Dolby Vision Projection), ஸ்கோப் ஸ்க்ரீன் (Scope Screen), 456 இருக்கைகள் டால்பி 3D ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டால்பி சினிமா தியேட்டர். குறிப்பாக இது தனித்துவமான திரை அனுபவத்தைத் தரும்.
அதேபோல் டால்பி சினிமா என்பது சாதாரணத் திரையரங்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது இது 'டால்பி விஷன்' (Dolby Vision) மற்றும் 'டால்பி அட்மாஸ்' (Dolby Atmos) ஆகிய இரண்டு நவீனத் தொழில்நுட்பங்களின் சங்கமமாகும். இந்த புதிய தொழில்நுட்பம் திரையில் தோன்றும் காட்சிகளுக்கு அபாரமான வண்ணங்களையும், ஆழமான கருப்பு நிறத்தையும், மிகத் தெளிவான வெளிச்சத்தையும் வழங்குகிறது. ஆகவே இதன் மூலம் திரையில் தோன்றும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் காண்பதைப் போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கும்.
டால்பி அட்மாஸ்
அதுவும் இந்த தியேட்டரில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஒலித் தொழில்நுட்பமானது ஒலியைத் திரையரங்கின் அனைத்து திசைகளிலும், ஏன் மேற்கூரை உள்ளிட்ட பகுதிகளிலும் சீராகப் பரவச் செய்கிறது. இதனால் ஒரு திரைப் படத்தின் சத்தமானது பார்வையாளர்களைச் சுற்றிச் சுழன்று, அவர்களைத் திரைக்கதைக்குள் முழுமையாக மூழ்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அதிநவீன வசதிகள் கொண்ட முதல் திரையரங்கம் தமிழகத்தில் முதன்முதலாகத் திருச்சியில் அமைந்திருப்பது திருச்சி மக்களுக்குக் கிடைத்த ஒரு பெருமையாகும். அதேசமயம் திருச்சி எப்போதுமே கலை மற்றும் கலாச்சாரத்தின் மையமாக விளங்கும் ஒரு நகரமாகும். தற்போது டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் இங்கே அறிமுகப்படுத்துவது, நகரத்தின் பொருளாதார மற்றும் சுற்றுலா மதிப்பையும் உயர்த்தும் என்று கருதப்படுகிறது.

இனிமேல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை அவற்றின் முழுத் தொழில்நுட்பத் தரத்துடன் ரசிக்க பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் திருச்சி மக்களுக்கு இருக்காது. மேலும் இந்தத் திரையரங்கை வடிவமைத்ததற்காக மும்பைச் சேர்ந்த ஆர்க்கிடெக்ட் சக்திஸ் செட்டி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியாவில் இதற்கு முன்பு திறக்கப்பட்ட டால்பி (Dolby) தியேட்டர்களாக ஹைதராபாத் அல்லு சினிமாஸ், பெங்களூரு எம்பி சினிமா1, புனே சிட்டி பிரைட் ஆகியவை உள்ளன. சென்னைக்கு முன்பாக திருச்சியில் டால்பி தியேட்டர் வந்தது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications