ChatGPT மீது தடை.. 20 நாட்கள் கெடு.. 22 மில்லியன் டாலர் அபராதம்.. Google-க்கு இப்போ குளுகுளுனு இருக்குமே!
கடந்த பல வாரங்களாக கூகுள் (Google) நிறுவனத்திற்கும், அந்நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கும் "இவனை சமாளிக்கவே முடியலையே" என்கிற எண்ணத்தை கொடுத்து வந்த சாட்ஜிபிடி (ChatGPT) மீது ஒரு பெரிய குற்றம் சுமத்தப்பட்டு, அது இத்தாலியில் தடையும் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்படும் அளவிற்கு சாட்ஜிபிடி மீது அப்படி என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது? இந்த தடை தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா? இந்த தடை குறித்து சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய (மைக்ரோசாஃப்-ஆல் நிதி உதவி பெறும்) ஓப்பன்ஏஐ (OepnAI) நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன? இதோ விவரங்கள்:

சாட்ஜிபிடி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமென்ன? மிகவும் கடுமையான ஐரோப்பிய யூனியன் டேட்டா ப்ரொடெக்ஷன் விதிகளை ( European Union Data Protection Rules) மீறுவது குறித்து 'இன்வெஸ்டிகேட்' (Investigate) செய்ததாக ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாஃப்ட்வேரான (Artificial intelligence Software) சாட்ஜிபிடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது "பயனர்களின் உரையாடல்கள்" மற்றும் சந்தாதாரர் பணம் செலுத்துதல் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய தரவு மீறலை, கடந்த மார்ச் 20 அன்று சாட்ஜிபிடி சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விசாரணையில் சாட்ஜிபிடி பிளஸை பயன்படுத்தும் 1.2% பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வேறொரு பயனருக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியின் டேட்டா பாதுகாப்பு ஆணையத்தின்படி (Italian Data Protection Authority) இதுவொரு டேட்டா ப்ரீச் (Data Breach) ஆகும்; அதாவது தரவு மீறல் குற்றமாகும். இதனை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தால் ஆதரவளிக்கப்பட்டும் சாட்ஜிபிடி-க்கான அணுகலை இத்தாலிய அரசாங்கம் இடை நிறுத்தம் செய்துள்ளது.
இந்த தடை தாற்காலிகமா? நிரந்தரமா? இத்தாலிய நாட்டின் டேட்டா பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, தன் நாட்டில் உள்ள பயனர்களின் டேட்டாவை ப்ராசஸிங் (Processing Users Data) செய்வதில் இருந்து ஓப்பன்ஏஐ நிறுவனம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாட்ஜிபிடி ஆனது ப்ரைவஸிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் வரை இந்த தடை நீடிக்கும்.
ஓப்பன்ஏஐ-க்கு 20 நாட்கள் கெடு.. பிறகு? இத்தாலிய பயனர்களின் டேட்டா ப்ரைவஸியை உறுதி செய்ய ஓப்பன்ஏஐ நிறுவனம் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை 20 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் 20 மில்லியன் யூரோக்கள் (கிட்டத்தட்ட 22 மில்லியன் டாலர்கள்) அல்லது வருடாந்திர உலகளாவிய வருவாயில் 4% வரை அபராதம் விதிக்கப்படும் என்று இத்தாலிய கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
மேலும் சாட்ஜிபிடி-ஐ பயனர்களின் வயதை சரிபார்ப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை என்கிற குற்றச்சாட்டையும் இத்தாலிய அரசு முன்வைத்துள்ளது. இதனால் இளம் வயதினர் கூட அவர்களின் வயது மற்றும் விழிப்புணர்வுக்கு முற்றிலும் பொருத்தமற்ற பதில்களை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக இத்தாலிய அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது சாட்ஜிபிடி மீதான முதல் தடை அல்ல! சாட்ஜிபிடி-க்கான அணுகலைத் தடுக்கும் முதல் நாடு இத்தாலி தான் என்றாலும் கூட, சாட்ஜிபிடி மீது "விழுந்த" முதல் தடை நடவடிக்கை இதுவல்ல. உலகெங்கிலும் உள்ள சில பொது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








