மேட்டுப்பாளையம்-ஊட்டி மொத்த ரயிலையும் ஹனிமூனுக்கு வேண்டிப் பதிவு செய்த தம்பதியினர்.!

ஊட்டி மலை ரயில் தற்காலிக ரத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் மக்களின் பயன்பாட்டிற்காக துவப்பட்டுள்ளது.

By Sharath
|

ஊட்டி மலை ரயில் தற்காலிக ரத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டி மலை ரயில் சேவை உலக புகழ் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்தது.

ஊட்டி மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை இயக்கப்படுகிறது. உண்மையில் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அழகான 5 மணி நேரப் பயணமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வனப்பகுதி வழியாக 13 மூன்று குகைகள் மற்றும் மலை மேலே ஏறும் ரயில் அனுபவத்தின் மூலம் ஊட்டியின் அழகை ரசிக்கும் படி அமைந்திருக்கிறது இந்த மலை ரயில் பயணம்.

மேட்டுப்பாளையம்-உதகமண்டலம்

மேட்டுப்பாளையம்-உதகமண்டலம்

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் புதுமண ஜோடி, தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்திய மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் வரை செல்லும் முதல் ரயில் பயணத்தில் தங்களின் தேனிலவை துவங்கியுள்ளனர்.

புதுமண தம்பதி

புதுமண தம்பதி

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் வில்லியம் லின்(30) மற்றும் சில்வியா பிளாசிக்(27) புதுமண தம்பதியினர் தங்களின் தேனிலவை கொண்டாட திட்டமிட்டுஊட்டி மலை ரயில் சேவையை மொத்தமாகதங்களுக்கானதாகமாற்றி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மலை ரயில்

மலை ரயில்

இந்தப் புதுமண தம்பதியினர் தங்களின் தேனிலவு அனுபவத்தைச் சுவாரசியமாக்க ஊட்டியில் இருந்து செல்லும் மலை ரயில் பெட்களின் அனைத்துச் சீட்டுகளையும் அவர்களே வாங்கியுள்ளனர்.

 இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா

இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா

ரூ.3 லட்சம் செலவழித்து இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) வலைத்தளத்தின் மூலம் இந்த ரயிலின் முழு பயண சீட்டுகளையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறப்பு இரயில் சேவை

சிறப்பு இரயில் சேவை

மலைப்பகுதி சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, நீலகிரி மலை இரயில் பிரிவில் 120 இருக்கைகள் கொண்ட சிறப்பு இரயில் சேவையை இயக்க ரயில்வே வாரியம் சேலம் பகுதிக்கு ஒப்புதல் அளித்தது.

 உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

இந்தத் தம்பதியினர் வெள்ளி அன்று துவக்கப்பட்ட மலை ரயில் சேவைக்கு முதல் பயணியாக மொத்த ரயிலையும் பதிவு செய்து பயணத்தை துவங்கியுள்ளனர். மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் ஸ்டேஷன் மேலாளர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

உலக பாரம்பரியம்

உலக பாரம்பரியம்

மொத்தம் 3 பெட்டிகளுடன் மட்டும் இயக்கப்படும் மலை ரயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
First to charter special train to Nilgiris, British couple books all coaches : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X