Home
News

இந்தியாவில் கடை திறந்து வைக்க வந்த Tim Cook! இப்படி ஒரு கடை உலகத்திலயே இல்லையாம்!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ரீடைல் கடையை இன்று திறந்துள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த புதிய Apple BKC ரீடைல் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் ரீடைல் ஸ்டோரை திறந்து வைப்பதற்காக டிம்-குக் இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 25 ஆண்டு நிறைவை ஒட்டி, இந்த ஆப்பிள் ரீடைல் ஸ்டோரை நிறுவனம் காலை 11 மணிக்கு திறந்தது. இந்தியாவில் முதல் ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் திங்களன்று (நேற்று) இந்தியாவிற்கு வருகை தந்தார். அதனை தொடர்ந்து இன்று ஆப்பிள் ரீடைல் ஸ்டோரை திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவில் கடை திறந்து வைக்க வந்த Tim Cook! இப்படி ஒரு ஸ்பெஷல் கடை-ஆ?

இந்தியாவின் முதல் ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் டிம் குக் நேரடியாக உரையாடினார். டிம் குக் தனது ட்வீட்டில், ஆப்பிள் பிகேசி ஸ்டோரிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஊழியர்களுடன் சேர்ந்து அனைத்து வாடிக்கையாளர்களையும் பொது திறப்புக்கு வரவேற்றார். முன்னதாக, நடிகர் மாதுரி தீட்சித், மும்பையில் வடா பாவ் சாப்பிடும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி , குக் இந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை சந்திக்க உள்ளார். ஆப்பிள் பிகேசி இந்தியாவில் ஐபோன் தயாரிப்பாளரின் முதல் ரீடைல் ஸ்டோர் ஆகும். இந்தியாவில் அதன் ஆன்லைன் ஸ்டோரைத் திறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிசிகல் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் ஆப்பிள் தனது சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. Apple BKC ஸ்டோர் ஆன் ஸ்டோர் பிக்அப் அம்சத்தையும் கொண்டுள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தயாரிப்புகளை ஆர்டர் செய்து, நேரடியாக ஆப்பிள் ரீடைல் ஸ்டோரில் இருந்து வாங்கிக்கொள்ளலாம். Apple BKC ஆனது உலகின் மிகவும் ஆற்றல்-திறனுள்ள கடைகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் கடை திறந்து வைக்க வந்த Tim Cook! இப்படி ஒரு ஸ்பெஷல் கடை-ஆ?

ஏனெனில், இது ஒரு பிரத்தியேக சோலார் அரே வரிசை மற்றும் கடை செயல்பாடுகளுக்கு புதைபடிவ எரிபொருட்களை பூஜ்ஜியமாக நம்பியுள்ளது. ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மற்றொரு கடையைத் திறக்கிறது. இது டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ளது. இந்த ஆப்பிள் ஸ்டோர் ஏப்ரல் 20 ஆம் தேதி வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளது. ஆப்பிள், இந்தியாவில் பிரபலமான பிராண்டாக இருந்தாலும், மொத்த சந்தைப் பங்கில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

எவ்வாறாயினும், அதன் Q1 2023 வருவாய் அறிக்கையின்படி, ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியையும் காலாண்டு வருவாய் சாதனையையும் பதிவு செய்துள்ளது. குபெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனம் 2017 இல் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன் மூன்றாம் தரப்பு சப்ளையர்கள் நாட்டில் மூன்று ஆலைகளைக் கொண்டுள்ளனர். இங்கு செயல்படும் சப்ளை செயின் பார்ட்னர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Apple Retails Store Inaugurated By Tim Cook In Bandra Kurla Complex in Mumbai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X