இனி படத்துக்குள் நாமும் போய் வரலாம்!

Written By:

இனி திரைப்படங்களை நாம் பார்க்க 11D தொழில்நுட்பம் பயன்பட இருக்கின்றது.

முப்பரிமாணம் எனப்படும் '3-டி' தொழில்நுட்பத்தில் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற திரைப்படம் 1984ல் இந்தியாவில் தயாராகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இதனையடுத்து, 4-டி, 5-டி, 7-டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களும், திரையரங்குகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இனி படத்துக்குள் நாமும் போய் வரலாம்!

இந்நிலையில், 11 பரிமான காட்சி அமைப்பு கொண்ட நவீன 11-டி திரையரங்கு ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வரும் 18ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இடி, மின்னல், பனி, புகை, வாசனை போன்ற காட்சியமைப்புக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது 11-டி தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சமாகும்.

ஒலியமைப்புக்கு தக்கபடி, இருக்கைகளில் திடீர் அதிர்வு, நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துவது என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் நவீன தொழில் நுட்பமும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்படும்.

16 வகையான ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்குக்கு 'கூஸ் பம்ப்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக சுமார் 1/2 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய 11-டி திரைப்படங்களை மட்டுமே திரையிடப்படும்.

தினந்தோறும் 24 காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திரையரங்கில்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot