காதை பிளக்கம் சத்தம், 88,500 கிமீ வேகம், 10 முழு நிலவு வெளிச்சம்- பூமிக்கு வந்த விண்கல்: நாசா ஓபன் அறிக்கை!

|

சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்கற்களும் மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. இவைகளில் சில பூமியின் இருக்கும் ஈர்ப்பு விசை காரணத்தால் அவ்வப்போது வளிமண்டலத்துக்குள் நுழைகிறது. விண்வெளியில் இருந்து கீழே விழும் பொருட்கள் காற்றின் அடர்த்தி மற்றும் அதன் அதிவேக பயணத்தால் தீப்பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இதுபோன்ற பெரும் பொருட்கள் கடலிலேயே விழும், தற்போது இதுபோன்ற பொருள் ஒன்று அமெரிக்கா மிஸ்ஸிஸிப்பி பகுதியில் விழுந்திருக்கிறது.

அதீத சத்தம் கேட்ட மக்கள்

அதீத சத்தம் கேட்ட மக்கள்

அமெரிக்காவின் அர்கன்சாஸ், லூசியான மற்றும் மிஸ்ஸிஸிப்பி பகுதி மக்களில் சிலர் திடீரென நேற்று காலை அதீத சத்தம் அதாவது காதை பிளக்கம் அளவிற்கு சத்தம் ஒன்றை கேட்டிருக்கின்றனர். இந்த மூன்று பகுதியில் வாழும் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பிரகாசமான ஒளியுடன் நெருப்புப்பந்து ஒன்று பூமியை நோக்கி வந்து விழுந்ததை கண்டதாக குறிப்பிடுருக்கின்றனர். மேலும் மிஸ்ஸிஸிப்பி மாகாணப் பகுதி மக்களில் சிலர் காதை பிளக்கும் அளவிற்கான பலத்த சத்தத்தைக் கேட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மிஸ்ஸிஸிப்பி ஆற்றின் மேல் 87 கிமீ தொலைவில் இந்த காட்சி காணப்பட்டிருக்கிறது.

பூமியை நோக்கி அதிவேகத்தில் பயணம்

பூமியை நோக்கி அதிவேகத்தில் பயணம்

இதுகுறித்து நாசா தெரிவிக்கையில், அதிவேகத்தில் பயணித்து பூமியை நோக்கி வந்து விழுந்தது விண்கல் தான் என தெரிவித்திருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை போலைட் (Bolide) என குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த விண்கல் ஆனது சுமார் 88500 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது துண்டுகளாக உடைந்து சிதறி இருக்கிறது. இந்த லூசியானாவில் ஒரு பகுதியின் வடக்கே உள்ள ஒரு சதுப்பு நிலப்பகுதிக்கு மேலே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.

வளிமண்டலத்தில் ஆழமாக நுழையும் வெடிப்பு

வளிமண்டலத்தில் ஆழமாக நுழையும் வெடிப்பு

விஞ்ஞானிகள் இந்த பொருளை பொலைட் எனறு அழைக்கின்றனர். ஒரு மணிநேரத்துக்கு 55,000 மைல் வேகத்தில் தென்மேற்கு நோக்கி இந்த பொருள் நகர்ந்தது. வளிமண்டலத்தில் ஆழமாக நுழைந்திருக்கும் போது இந்த பொருள் துண்டுகளாக உடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அதீத சத்தம் கேட்டுள்ளது, இது கிராண்ட் வளைகுடா அணுமின் நிலையத்தில் ஏற்பட்டிருக்கலாம் என அந்த பகுதியினர் நினைத்திருக்கின்றனர். பின் Claiborne County அவசரகால மேலாண்மை நிறுவனம், இதில் அணுமின் நிலையம் சம்பந்தப்படவில்லை என பேஸ்புக் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது. தொடர்ந்து "கிராண்ட் வளைகுடா அணுமின் நிலையம்., பாதுகாப்பாக இருக்கிறது. மாவட்டத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்தவர் தெரிவித்த தகவல்

சம்பவ இடத்தில் இருந்தவர் தெரிவித்த தகவல்

லூசியானா மாகாணத்தின் ஒரு பகுதியில் விழுந்த இந்த விண்கல் ஆனது சுமார் மூன்று டன் டிஎன்டி ஏற்படுத்தக்கூடிய பலத்த சத்தத்தினை ஏற்படுத்தியதாகவும், அதேபோல் விழந்த சில நிமிடங்களில் (உச்ச சமயத்தில்) 10 முழு நிலவு அளவான வெளிச்சத்தை ஏற்படுத்தியதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை நேரில் பார்த்த சம்பவ இடத்தில் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், பாஸ்கட் போல் போன்ற வடிவம் கொண்ட ஒரு ஆரஞ்ச் நிற தீப்பிழம்பு ஒன்று மிஸ்ஸிஸிப்பி நகர் நதியின் மேற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. இந்த ஆர்ஞ்ச் நிற தீப்பிழம்பு பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் வால் போன்று காணப்பட்டதாக குறிப்பிட்டார். அதேபோல் இந்த விண்கல் மணிக்கு 88,500 கிமீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்தது எனவும் இது பூமியின் வளிமண்டலத்தில் அழமாக இறங்கும் போது துண்டுகளாக வெடித்து சிதறி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விண்கல் மோதியதில் அணுமின் நிலையத்தில் பாதிப்பு இல்லை

இந்த சத்தம் கிராண்ட் வளைகுடா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த சத்தம் விண்கல் விழுந்ததால் ஏற்பட்டிருக்கிறது. இந்த விண்கல் துண்டு துண்டானது, பின் இது பூமியில் மோதியபோது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது அந்த பகுதியில் பெரும் அதிர்வுகளை உள்ளாக்கி இருக்கிறது. விண்கல் மோதியதில் அருகில் இருந்த அணுமின் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதன்காரணமாக மாவட்டத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரகாசமான நெருப்புப் பந்து போன்ற ஒன்று

பிரகாசமான நெருப்புப் பந்து போன்ற ஒன்று

ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிஸ்ஸிஸிப்பி ஆகிய இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்டோர் காலை 8 மணியளவில் வானத்தில் வழக்கத்துக்கு புறம்பான பிரகாசமான நெருப்புப் பந்து போன்ற ஒன்றை பார்த்ததாகவும், சிலர் காதை பிளக்கும் அளவிலான சத்தத்தை கேட்டதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது. இது முதலில் மிஸ்ஸிஸிப்பி ஆற்றின் மேலே 87 கிலோமீட்டர் தொலைவில், அல்கார்ட், மிஸ்ஸிஸிப்பிக்கு அருகில் காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

File Images

Best Mobiles in India

English summary
Fireball Spotted in Arkanas and Mississippi with Loud Booms: NASA Confirmed thats Asteroid

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X