தகதக தங்க நிறம்.. ஜொலிக்கும் அம்சம்.. கம்மி விலையில் இப்படி ஒரு டாப் கிளாஸ் வாட்ச்-ஆ?
ஃபயர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் (Fire-Boltt Starlight) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நிறுவனம் இப்போது ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனம் 123 ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode) பயன்முறை ஆதரவுடன் வருகிறது. ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் பயனர்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மியூசிக் (music) மற்றும் கேமராவை (camera) கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 2.01' இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் புளூடூத் காலிங் (Bluetooth calling), ஐபி68 ரேட்டிங், பல வாட்ச் ஃபேஸ்கள் (watch face) மற்றும் ஹெல்த் மானிட்டரிங் அம்சங்களுடன் வரும். இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்த ஃபயர்-போல்ட் புதிய ஸ்மார்ட்வாட்சை மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்து அறிவித்துள்ளது. புதிய ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் ரூ. 2,000 விலைக்கு குறைவான விலையில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் துருப்பிடிக்காத எஃகு உடலை கொண்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட்டின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாமா? இந்தியாவில் Fire-Boltt Starlight விலை ரூ.1,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இன்று முதல் கிடைக்கும் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும். ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் சாதனம் ரோஸ் கோல்ட் (Rose gold), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் சாதனத்தின் அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கையில், இது ஒரு சதுர வடிவ டயலைக் கொண்டுள்ளது.

பளபளப்பான தோற்றத்துடன் துருப்பிடிக்காத எஃகு உடலைக் கொண்டுள்ளது. வலது பக்கத்தில், ஸ்மார்ட்வாட்ச்சில் UI அம்சமும் உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் 240 × 296 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் பல வாட்ச் முகங்கள் ஆதரவுடன் 2.01' இன்ச் HD டிஸ்ப்ளேவை (Display) இது கொண்டுள்ளது.
இந்த ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Smartwatch) ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் (microphone) மற்றும் புளூடூத் அழைப்பு அம்சம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (voice assistant) ஆதரவிற்கான ஸ்பீக்கருடன் வருகிறது. ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் மாதவிடாய் கண்காணிப்புடன், ஸ்லீப் மானிட்டர் அம்சம், இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.
புதிய ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்போடு, சுமார் 30 நிமிடங்களுக்கு 1.5 மீட்டர் வரை நன்னீர் வெளிப்பாட்டைத் தாங்கும் என்பதைக் குறிக்கிறது. இது IP68 மதிப்பீட்டை வழங்கும். ஜியோனீ ஜிஎஸ்டபுள்யூ 12 (Gionee GSW12), ஃபயர்-போல்ட் நிஞ்சா 3 (Fire-Boltt Ninja 3) மற்றும் நாய்ஸ் ஆர்க் (Noise Arc) உட்பட ரூ.2,000க்கு குறைவான சில ஸ்மார்ட்வாட்ச்களில் மட்டுமே இந்த அம்சம் உள்ளது.
இந்த புதிய ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் ஸ்மார்ட் வாட்ச் (Fire-Boltt Starlight Smartwatch) சாதனம் 123 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்முறை ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் குவிக் டயல் பேட், வாய்ஸ் கால் ஹிஸ்டரி, ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் அம்சம் போன்ற பல அம்சங்களும் உள்ளன. ஃபயர்-போல்ட் ஸ்டார்லைட் பயனர்கள் இசையையும் கேமராவையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இதை இன்று முத்த நீங்கள் வெறும் ரூ.1,999 என்ற விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








