Home
News

இந்த வாட்சை வாங்குனா சாக்லேட் பாய்ஸ் கூட ரஃக்டு பாய்ஸ் ஆகிடுவாங்க.! புது Fire-Boltt Sphere ரெடி.!

முரட்டுத்தனம் எதில் இருந்தாலும் அது சில பெண்களுக்கு பிடிக்கும்.. அது ஸ்மார்ட்வாட்ச்சாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் ஒரு ரஃக்டு பாய் ஆக இருந்தாலும் சரி, கட்டாயம் அனைவரின் கவனமும் அந்த நபரை நிறுத்தி கிராஸ் செய்து போகும்.

அப்படி மக்களின் கவனத்தைப் பார்த்ததும் ஈர்த்த ஒரு ஸ்மார்ட் வாட்ச் (dmartwatch) சாதனம் தான் இந்த Fire-Boltt Sphere என்ற இந்த ரஃக்டு லுக் ஸ்மார்ட் வாட்ச் சாதனமாகும். அவுட்டோர் சீரிஸ் சாதனமாக உயர் உறுதியுடன், நீடித்து நிலைக்கும் முரட்டு தன்மையுடன் இந்த ரஃடு ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லுக் முரட்டுத்தனமாகக் கடுமையான உறுதியுடன் இருந்தாலும், இதன் விலை மிகவும் லேசாக கம்மியாக இருக்கிறது.

இந்த வாட்சை வாங்குனா சாக்லேட் பாய்ஸ் கூட ரஃக்டு பாய்ஸ் ஆகிடுவாங்க.!

சாக்லேட் பாய்ஸ் கூட ரஃக்டு பாய்ஸ் ஆகலாம்.. இந்த Fire-Boltt Sphere வாட்ச் மட்டும் இருந்தா போதும்!

ஆம், மக்களே.! இந்தியாவில் இப்போது வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் போல இல்லாமல், இது மிகவும் குறைந்த விலையில் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் வருகிறது. இன்னும் இதில் ஏராளமான அம்சங்கள் உள்ளது. பட்ஜெட் விலையில், பார்ப்பதற்கும் - பயன்படுத்துவதற்கும் ஒரு ரஃக்டு லுக் ஸ்மார்ட்வாட்சை வாங்க உங்களுக்கு ஐடியா இருந்தால், இந்த Fire-Boltt Sphere சாதனத்தைத் தவறவிடாதீர்கள் மக்களே.

குறிப்பாக, ரஃக்டு பாய்ஸ் இதைத் தவறவிடக்கூடாது. மற்றொரு புறம் நீங்கள் சாக்லேட் பாய் ஆக இருந்தாலும் சரி, இந்த சாதனத்தை உங்கள் கையில் கட்டினால், தானாக ஒரு ரஃக்டு லுக் உங்கள் உடம்பில் முறுக்கேறிவிடும் பாய்ஸ். சரி, இந்த புதிய Fire-Boltt Sphere ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இதை எங்கிருந்து? எப்போதிலிருந்து வாங்கலாம் என்பது போன்ற விபரங்களைப் பார்க்கலாம் வாங்க.

இந்த வாட்சை வாங்குனா சாக்லேட் பாய்ஸ் கூட ரஃக்டு பாய்ஸ் ஆகிடுவாங்க.!

Fire-Boltt Sphere வாட்சின் சிறப்பம்ச விபரங்கள்

இந்த புதிய ஃபயர்-போல்ட் ஸ்பியர் (Fire-Boltt Sphere) ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஷாக் ப்ரூஃப் மெட்டல் பாடியுடன் வருகிறது. இது 25 நாட்கள் வரை நீடிக்கும் பெரிய 600mah பேட்டரியுடன் வருகிறது. கூடுதலாக நீடித்து நிலைக்க IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் இது கொண்டுள்ளது. இந்த வாட்ச் 400×400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடைய 1.6' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ஃபயர்-போல்ட் ஸ்பியர் பல ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இது உடற்பயிற்சி கண்காணிப்பை எளிதாக்குகிறது. உண்மையில், இந்த வாட்ச் ஒரு "இன்டெலிஜெண்ட் ஸ்போர்ட்ஸ் அல்காரிதம்" அம்சத்துடன் வருகிறது. உங்கள் ஸ்மார்ட்ஃபோனை கையில் எடுக்காமலேயே அழைப்புகளைச் செய்ய மற்றும் பெற HIFI ஆடியோ ஆதரவுடன் புளூடூத் அழைப்பையும் இது கொண்டுள்ளது.

இந்த வாட்சை வாங்குனா சாக்லேட் பாய்ஸ் கூட ரஃக்டு பாய்ஸ் ஆகிடுவாங்க.!

புதிய Fire-Boltt Sphere ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன தெரியுமா?

பிளாக் மற்றும் கிரீன் ஃபாரஸ்ட் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட் வாட்ச்களுக்கே உரியப் பல அம்சங்களுடன் இது வருகிறது. SPo2, ஹார்ட் ரேட், ஸ்லீப் சைக்கிள், வேதர் ரிப்போர்ட், ஸ்டேப் கவுண்ட் போன்ற பல அம்சங்களை இது ஆதரிக்கிறது. இதன் விலை பற்றிப் பேசுகையில், இந்த புதிய Fire-Boltt Sphere சாதனம், இப்போது வெறும் ரூ. 2,999 என்ற அறிமுக விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

விருப்பம் உள்ள ரசிகர்கள் மற்றும் ரஃக்டு பாய்ஸ்கள் Flipkart மற்றும் Fireboltt.com ஆகிய தளங்கள் வழியாக இதை பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம். இந்த மாடல் மட்டுமின்றி, Fireboltt நிறுவனம் கிட்டத்தட்ட 6 ரஃக்டு ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை கொண்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கோப்ரா, டேங்க், சூப்பர்நோவா, கிளாடியேட்டர் மற்றும் டாகர் போன்ற மாடல்களையும் செக் செய்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Sphere with 600mah Battery Life Of 25 Days Launched In India At Rs 2999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X