பக்கா பிரீமியம்.. கம்மி பட்ஜெட்ல.. ரூ.1,999க்கு மெட்டாலிக் வாட்ச்.. ப்ளூடூத் காலிங்.. 230mAh பேட்டரி!
பிரீமியம் மெட்டாலிக் வாட்ச் பிரியர்களுக்காவே கம்மியான பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ஃபயர் போல்ட் நிறுவனத்தின் ஃபயர் போல்ட் சோலஸ் (Fire Boltt Solace) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் விற்பனை தேதி, அறிமுக விலை உள்ளிட்ட விவரங்கள் இதோ.
ஃபயர் போல்ட் சோலஸ் அம்சங்கள் (Fire Boltt Solace Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் மெட்டாலிக் டிசைன் (Premium Metallic Design)கொண்டுள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியில் (Stainless Steel Body) கண்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் 1.32 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது.

இதில் 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) வருகின்றன. அதோடு கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Ccontacts) ஆகிய ஹோம் ஸ்கிரீன் சப்போர்ட் உள்ளது.
இந்த ஃபயர் போல்ட் சோலஸ் வாட்ச்சில் ஒரு ரோட்டேட்டிங் கிரவுன் (Rotating Crown) மற்றும் 2 புஸ் பட்டன்கள் (Push Buttons) கன்ட்ரோலுக்கான கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) வருகிறது. ஆகவே, கால் டயல், அலாரம் உள்ளிட்டவை வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் செய்ய முடியும். இதில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Heath Suit) சப்போர்ட் உள்ளது.
அதோடு நான்கு ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) வருகின்றன. இதில் ஸ்லீப்பிங் மானிட்டர் (Sleeping Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) ஆகியவை அடங்கும். அதோடு 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன.
இதன் மூலம் ரன்னிங் (Runnig), கிளிம்பிங் (Climping), ஸ்கேட்டிங் (Skating), ஜாக்கிங் (Jogging) போன்ற அவுட்டோர் ஆக்டிவிட்டகளை கண்காணிக்க முடியும். மேலும், டிரிங்கிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Remainder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sdentary Remainder) வருகிறது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் உள்ளது.
இதன் மூலம் கால், எஸ்எம்எஸ், ஆப் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். அதோடு வெதர் அப்டேட் (Weather Update), கால்குலேட்டர் (Calculator), அலாரம் (Alarm), டைமர் (Timer) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) அம்சங்கள் வருகின்றன. மியூசிக் (Music) மற்றும் கேமரா (Camera) கன்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சில் 230mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், நார்மல் மோடில் (Normal Model) தொடர்ந்து 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். அதுவே ஸ்டாண்ட்பை மோடில் (Standby Mode) 15 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஃபயர் போல்ட் வாட்ச் பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு (Gold) மற்றும் சில்வர் (Silver) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் இன்று (அக்டோபர் 11) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 12) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சை ஃபயர்போல்ட்.காம் (Fireboltt.com) மற்றும் அமேசான்.இன் (Amazon.in) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளாம். இதன் விலையை பொறுத்தவரையில் ரூ. 1,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அறிமுக சலுகையாக கிடைக்கக் கூடியதாகும். ஆகவே, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications