சாக்ஸ் இல்ல சார்.. ஷார்க்ஸ்.! முரடர்களுக்கான புது Smartwatch! அதுவம் இவ்வளவு கம்மி விலையிலா?
முரட்டுத்தனமானவர்களுக்கான புது ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவுட்டோரில், ரஃப் அண்ட் டஃப் ஆக செயல்படும் நபர்களுக்கான புது ஸ்மார்ட் வாட்ச் சாதனம் தான் இந்த Fire-Boltt Shark. இதன் விலை மற்றும் அம்சம் என்வென்று இப்போது பார்க்கலாம்.
ஃபயர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் இன்று, அதன் அவுட்டோர் தொடரில் ஒரு புதிய பகுதியாக 'ஷார்க் (Shark)' எனப்படும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரஃக்டு என்று இருந்து வகையையும் கலந்து ஒரு முரட்டுத்தனமான வடிவமைப்பை கொண்டுள்ளது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை கொண்ட தனிநபர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும்.

ஃபயர்-போல்ட் ஷார்க் (Fire-Boltt Shark) ஸ்மார்ட்வாட்ச்சின் வெளியீடு Fire-Boltt Phoenix Ultra இன் வெற்றிகரமான வெளியீட்டைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Fire-Boltt Shark ஸ்மார்ட்வாட்ச் அவுட்டோர் பயன்பாட்டை கடுமையாக தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதனால், இதை நீங்கள் எந்த கவலையுமின்றி முரட்டுத்தனமாக பயன்படுத்தலாம்.
இதன் பாடி கட்டமைப்பு மிகவும் உறுதியான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற பாடி கேஸிங் கடினமான மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த வாட்ச் ஸ்வெட் ப்ரூப் வடிவமைப்பைக் கொண்டது. இது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சிலிக்கான் ஸ்ட்ராப் பேண்ட்களைக் கொண்டுள்ளது. இது வசதியான பொருத்தத்தை உறுதி செய்கிறது.
இதன் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இந்த புதிய Fire-Boltt Shark ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 240 × 284 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.83' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே குவாலிட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவை கொண்டுள்ளது. இது டூயல் கிரௌன் கொண்ட மிரட்டலான அம்சத்தை கொண்டுள்ளது.

இது பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. வாட்ச் உயர்தர ஆடியோவுடன் புளூடூத் அழைப்பையும் ஆதரிக்கிறது. இதன் இன்பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் மூலம் ப்ளூடூத் கால்லிங் அம்சம் சிறப்பாக செயல்படுகிறது. இது குவிக் டயல் பேட் உடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் பயணத்தின்போது அழைப்புகளை எளிதாக ஸ்மார்ட்வாட்சில் இருந்தபடியே, போனை கையில் எடுக்காமல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்த Fire-Boltt Shark ஸ்மார்ட்வாட்ச் ஸ்டாண்ட்பை பயன்முறையில் 25 நாட்கள் வரை நிலைக்கிறது. அதேபோல், கிளாசிக் பயன்முறையில் 8 நாட்கள் வரை நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. இந்த ஷார்க் ஸ்மார்ட்வாட்ச் தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பு, பெண்களின் உடல்நலம், ஸ்லீப் மானிட்டர், மற்றும் SpO2 கண்காணிப்பு போன்ற பல்வேறு உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு செயல்பாடுகளை கொண்டுள்ளது.
இது IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் இன்பில்ட் கேம்ஸ் உடன் வருகிறது. கூடுதலாக, இதில் இன்னும் ஏராளமான அம்சங்கள் கிடைக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Fire-Boltt Shark ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரூ.1799 விலையில் பிளிப்கார்ட் மற்றும் ஃபயர்-போல்ட் வலைத்தளம் வழியாக கிடைக்கிறது. இது பிளாக், பிளாக் கோல்டு, கோல்டு க்ரீன் மற்றும் கேமோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது..


Click it and Unblock the Notifications








