Home
News

கிளாசிக் டிசைனில் கவரும் Fire Boltt Phoenix Ultra வாட்ச்.. இது ஏன் ஸ்பெஷல்.?

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ஃபயர் போல்ட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபீனிக்ஸ் அல்ட்ரா ( Fire Boltt Phoenix Ultra) அறிமுகமாகி இருக்கிறது. பட்ஜெட் விலையில் மெட்டாலிக் கேசிங், ப்ளூடூத் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.

இதன் அசத்தலான கிளாசிக் வித் மார்டர்ன் (Classic with Modern) டிசைன் கவரும் வகையில் உள்ளது. இதன் அம்சங்கள் குறித்து விவரங்கள் இதோ. நம்மில் பலருக்கு ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்துவதே அதிகம் பிடித்து இருக்கிறது. குறிப்பாக, நகரங்களில் வசிப்போருக்கு ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கும் அம்சங்கள் அன்றாடம் உடல்நலத்தில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது.

கிளாசிக் டிசைனில் கவரும் Fire Boltt Phoenix Ultra.. இது ஏன் ஸ்பெஷல்?

இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் ( Body Temperature Monitor), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking), ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking) உள்ளிட்டவை உள்ளன.

இவை அனைத்தும் சென்சார்கள் மூலம் கணக்கிப்பட்டு உங்களது ஸ்மார்ட்போனுக்கு தகவல்களாக அனுப்பப்படுகிறது. இதற்கேற்ப நீங்கள் உங்கள் உடலை கவனித்துக் கொள்ளலாம். இதயநோய் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டுவருவோரை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் கண்காணித்தும் வர முடியும். சொல்லபோனால், பெண்களுக்கான மென்ஸ்சுரல் டிராக்கர் (Menstrual Tracker) கூட ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ளது.

அதேபோல விளையாட்டு வீரர்களுக்கும் உதவியாக இருக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட வாட்ச்களை யாருக்குத்தான் வாங்க தோன்றாது. இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் புதிய டிசைன்களிலும், அம்சங்களிலும் வாட்ச்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ஃபயர் போல்ட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபீனிக்ஸ் அல்ட்ரா ( Fire Boltt Phoenix Ultra) மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது.

ஃபயர் போல்ட் ஃபீனிக்ஸ் அல்ட்ரா அம்சங்கள்: 1.39 இன்ச் டிஸ்பிளே (240x240 பிக்சல்கள்) 60Hz ரிப்ஃரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதில் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச்களை போலல்லாமல், மெட்டாலிக் டிசைனில் கிளாசிக் ரெபெரென்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களை கவக்கூடிய வகையில் ப்ளூ ( Blue), கோல்டு (Gold ) , டார்க் கிரே ( Dark Grey), சில்வர் (Silver), ரெயின்போ (Rainbow ) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. அதோடு ப்ளூடூத் காலிங், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சங்களும் உள்ளன.

கிளாசிக் டிசைனில் கவரும் Fire Boltt Phoenix Ultra.. இது ஏன் ஸ்பெஷல்?

பேட்டரி பேக்-அப் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். ஸ்டாண்ட்பை மோடில் 30 நாட்கள் வரை பயன்படுத்தலாம். IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. குறிப்பாக கேமரா கண்ட்ரோல் வசதி உள்ளது. இதன் மூலம் போட்டோக்கள் எடுக்கும்போது கிளிக் செய்துகொள்ள முடியும்.

பொழுதுபோக்குக்காக சில கேம்ஸ்களும் உள்ளன. ஹாட் ரேட் மானிட்டர், ஆக்சிஜன் லெவல் மானிட்டர், காலோரிஸ் டிராக்கிங், ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் உள்ளிட்டவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலையை பொறுத்த வரையில் ரூ. 1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபயர்-போல்ட் மற்றும் அமேசானில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Phoenix Ultra Smartwatch Price And Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X