இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் வாங்க தான் வெயிட்டிங்.. அசத்தலா வெளிவந்த Fire-Boltt Phoenix Amoled..
ஃபயர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் புதிதாக ஃபயர்-போல்ட் மார்ஷல் (Fire-Boltt Marshell) என்ற ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, ஃபயர்-போல்ட் இப்போது ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அமோல்ட் (Fire-Boltt Phoenix Amoled) என்ற ஸ்மார்ட்வாட்சை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அமோல்ட் (Fire-Boltt Phoenix Amoled) ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.43' இன்ச் அமோலேட் (AMOLED) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 700 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பல சுகாதார கண்காணிப்பு அம்சங்கள், புளூடூத் அழைப்பு ஆதரவு மற்றும் ரொடேடிங் கிரௌன் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், இது 110+ ஸ்போர்ட்ஸ் மோட் முறைகள், உள்ளமைக்கப்பட்ட விளையாட்டுகள் மற்றும் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியாளர்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சின் விலை மற்றும் விரிவான விவரக்குறிப்புகளை பற்றி பார்க்கலாம். இந்தியாவில் Fire-Boltt Phoenix Amoled சாதனம் க்ரேய், கோல்டு மற்றும் பிளாக் வண்ணங்களில் வருகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் Fireboltt.com மற்றும் அமேசான் (Amazon) இல் ரூ. 2,199 அறிமுக விலையில் கிடைக்கும். இந்த ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அமோல்ட் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒரு வட்ட டயலைக் கொண்டுள்ளது. இது ரொடேடிங் கிரௌன் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 1.43' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது.
இது 700 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 466 × 466 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. மேலும், இது புளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்துடன், இன்பில்ட்டாக பில்ட் செய்யப்பட்ட மைக் மற்றும் ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் தூக்க கண்காணிப்பு, SpO2 மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கியம் போன்ற சுகாதார கண்காணிப்பு அம்சங்களும் இதில் உள்ளன.
உங்கள் ஸ்மார்ட்போன் காண்டாக்ட் விபரங்களை நீங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் ஒத்திசைக்கலாம் மற்றும் கால் ஹிஸ்டரி வரலாற்றையும் கூட வாட்ச் உடன் இணக்கம் செய்யலாம். இது 110+ ஸ்போர்ட்ஸ் மோட் முறை ஆதரவுடன், வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேம்களையும் கொண்டுள்ளது.
இது கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்மார்ட் அறிவிப்புகள் மற்றும் வானிலை புதுப்பிப்புகளைக் காண்பிக்கும். ஃபயர்-போல்ட் மார்ஷலை அறிமுகப்படுத்தியதைத் தவிர, ஃபயர்-போல்ட் சில நாட்களுக்கு முன்பு ஃபயர்-போல்ட் விஷனரி அல்ட்ரா, விஷனரி ப்ரோ மற்றும் எமரால்டு ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஃபயர்-போல்ட் விஷனரி அல்ட்ரா மற்றும் விஷனரி ப்ரோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் எமரால்டு இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஃபயர்-போல்ட் எமரால்டு 1.09' இன்ச் எச்டி டிஸ்ப்ளேவுடன் ரொடேடிங் கிரௌன் அம்சத்துடன் வருகிறது. இது மெட்டாலிக் ஸ்ட்ராப், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீடு பெற்றுள்ளது. இது வட்ட டயல், பல வாட்ச் பேஸ் மற்றும் 5 நாட்கள் வரை பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மற்ற ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே, ஃபயர்-போல்ட் எமரால்டை ஃபயர்-போல்ட் இணையதளம் மற்றும் அமேசான் வழியாக இந்தியாவில் வாங்கலாம். ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அமோல்ட் விவரக்குறிப்புகள் 1.43' இன்ச் AMOLED டிஸ்ப்ளே 466 × 466 பிக்சல்கள் தீர்மானம் உடன் 700 nits பிரகாசம்
வட்ட டயல் உடன் வருகிறது.
இதுவும் 110+ ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உதவியாளர் ஆதரவுடன் வருகிறது. இது ஸ்பீக்கர், மைக், புளூடூத் அழைப்பு ஆதரவு. இதுவும் ப்ளூடூத் கால்லிங் அம்சம் மற்றும் விரைவான டயல் பேட்,மொபைல் காண்டாக்ட் சிங்க், நோட்டிபிகேஷன், வெதர் அப்டேட், மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல் போன்ற அம்சத்தை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








