Home
News

700 ரூபாயில் தரமான TWS இயர்பட்ஸ்-ஆ! 40 மணிநேர பிளேபேக்.. ENC கூட இருக்கா? அட்ராசக்கை.!

700 ரூபாய் விலை புள்ளியில் ஒரு தரமான ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க முடியுமா? என்றால், தாராளமாக வாங்கலாம் என்கிறது ஃபையர்போல்ட் (Fire-Boltt) நிறுவனம். ஆம், மக்களே இந்த விலை பிரிவில் நிறுவனம் இப்போது TWS இயர்பட்ஸ் சாதனத்தை வெளியிட்டுள்ளது.

குறைந்த விலையில் அதிக அம்சங்களை கொண்ட ஒரு பெஸ்ட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS), சாதனத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், கட்டாயமாக இந்த சாதனத்தை தான் வாங்க வேண்டும். மலிவு விலையில் ஒரு தரமான இயர்பட்ஸ் சாதனத்திற்கு தேவையான அணைத்து அம்சங்களையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. ஃபையர்போல்ட் ஃபையர் பாட்ஸ் ஏரிஸ் (Fire-Boltt FirePods Ares) என்ற சாதனத்தை இந்திய சந்தையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

700 ரூபாயில் தரமான TWS இயர்பட்ஸ்-ஆ! 40 மணிநேர பிளேபேக்.. ENC கூடவா?

இந்த புதிய ஃபையர்போல்ட் ஃபையர் பாட்ஸ் ஏரிஸ் (Fire-Boltt FirePods Ares) சாதனம் ரூ.799 என்ற விலையில் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில், இதில் என்னென்ன அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க. குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான TWS அனுபவத்தை அனுபவிக்க துடிக்கும் வடிக்கையாளர்களுக்காக பிரதியேகமாக உருவாக்கப்பட்டது.

இந்த புதிய ஃபையர்போல்ட் ஃபையர் பாட்ஸ் ஏரிஸ் இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் பிளாக் (black), பிங்க் (pink) மற்றும் வைட் (white) வண்ண விருப்பங்களில் வாங்கலாம். இது Fire-Boltt.com இல் எளிதாக வாங்க கிடைக்கிறது. விரைவில் மற்ற இ-காமர்ஸ் (e-commerce) தளங்களிலும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. Fire-Boltt FirePods Ares Earbuds எளிமையான தொகுப்பில் சில ஈர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இவை 13 மிமீ சவுண்ட் டிரைவர்களுடன் (13mm sound drivers) வருகின்றன. இது நல்ல ஆடியோ (audio) தரத்தை உறுதி செய்கிறது. அதிக விலை கொண்ட இயர்பட்ஸ் (earbuds) மாடல்களில் உள்ள என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) அம்சமும் இதில் உள்ளது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் ஆனது, அழைப்புகளின் (voice calls) போது உங்கள் மைக்கிலிருந்து (mic) வரும் இரைச்சலைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

லேக்-ஃப்ரீ ஆடியோ அனுபவத்தை வழங்குவதில், இந்த ஃபையர்போல்ட் ஃபையர் பாட்ஸ் ஏரிஸ் சாதனம் 40எம்எஸ் குறைந்த லேட்டன்சி (40ms low latency) கேமிங் மோட் (gaming mode) உடன் வழங்குகிறது. இந்த விலையில் இத்தகைய அம்சத்தை வழங்கியதற்காக கட்டாயம் கேமர்கள் (gamers) ஃபையர்போல்ட் ஃபையர் பாட்ஸ் ஏரிஸை பாராட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்களைக் (touch control) கொண்டுள்ளது.

700 ரூபாயில் தரமான TWS இயர்பட்ஸ்-ஆ! 40 மணிநேர பிளேபேக்.. ENC கூடவா?

ஆம், டச் கண்ட்ரோல் அம்சத்துடன் மியூசிக் (music) மற்றும் ஆடியோ கால் சேவைகளை நீங்கள் டச் மூலம் கட்டுப்படுத்தலாம். இது உங்கள் போனை ஒவ்வொரு முறையும் கையில் எடுக்காமல், எந்தவித தொந்தரவும் இல்லாமல் மியூசிக் மற்றும் அழைப்புகளை நிர்வகிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த இயர்பட்ஸ்கள் புளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth version 5.3) இல் இயங்குகின்றது.

இது தடையற்ற இணைப்புக்கான சூப்பர்சிங்க் (SuperSync) தொழில்நுட்பத்தை வழங்குகின்றது. உங்கள் மொபைலில் உள்ள AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உதவியுடன் இயர்பட்ஸ் மூலம் உங்களுக்கான சேவைகளை நீங்கள் அணுகலாம். போல்ட் ப்ளே ஆப் (Boltt Play apps) மூலம் இயர்பட்களைக் கட்டுப்படுத்தும் விருப்பத்தையும் இதனுடன் நீங்கள் பெறுவீர்கள். மொத்தம் 40 மணிநேர பிளேபேக் (40 hours playback) நேரத்தை இந்த இயர்பட்ஸ் சாதனம் வழங்குகிறது.

இதன் இயர்பட்கஸ்கள் மட்டும் 7 மணிநேரம் கொண்ட பேட்டரி (battery) ஆயுளை வழங்குகிறது. மேலும், பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. வெறும் 10 நிமிட சார்ஜ்ஜில் இது உங்களுக்கு 100 நிமிட பிளே நேரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.799 விலையில் 40 மணி நேர ஒட்டுமொத்த பிளே பேக் நேரத்துடன் ஒரு TWS இயர்பட்ஸ் சாதனம் கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt FirePods Ares TWS Earbuds Launched With 40h Battery Life Under Rs 799 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X