தடாலடி விற்பனை.. ரூ.999 விலையில் AI ANC .. மிரட்டும் Fire-Boltt TWS இயர்பட்ஸ்.. 40 மணிநேர பிளேடைம்..
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் புதிதாக ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) என்ற மலிவு விலை TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் அதன் ஃபையர்-பாட்ஸ் சீரிஸ் வரிசையில் புதிதாக ஜீயஸ் (Zeus) என்ற இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் இன்-இயர் பிளக் டைப் வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் TWS இயர்பட்ஸ் (Fire-Boltt Fire-Pods Zeus TWS Earbuds) 10mm டைனமிக் டிரைவர் (dynamic drivers) உடன் வருகிறது.

ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus):
இந்த புதிய ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) இயர்பட்ஸ் சாதனம் குவாட் மைக் AI-ANC அம்சத்துடன் வருகிறது. இது உங்களை சுற்றியுள்ள இரைச்சல் மற்றும் தேவையற்ற சத்தங்களை நாய்ஸ் கேன்சலேஷன் மூலம் மிகவும் துல்லியமாக அகற்றுகிறது. மலிவு விலையில் AI அம்சத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை (ANC) வழங்கும் இயர்பட்ஸ் சாதனம் இதுவாகும்.
இந்த புதிய ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) இயர்பட்ஸ் சாதனம் மொத்தமாக 40 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்று ஃபையர்-போல்ட் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) இயர்பட்ஸ் சாதனம் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் (Fast Charge Technology) வருகிறது என்பதனால், வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது.

ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் பாஸ்ட் சார்ஜிங் (Fire-Boltt Fire-Pods Zeus Fast Charging):
இது எவ்வளவு வேகமாக சார்ஜ் செய்கிறதென்றால், வெறும் 10 நிமிடங்களில் 100 நிமிட பிளே நேரத்தை வழங்கும் சார்ஜ் நேரத்தை வழங்குகிறது. இது டைப்-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இந்த ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) இயர்பட்ஸ் சாதனத்தில் கேமிங் மோட் (gaming mode) அம்சமும் உள்ளது. இது 40ms லோ-லேடன்சி (low-latency) உடன் லேக் இல்லாத சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
இது ப்ளூடூத் v5.3 (Bluetooth v5.3), மற்றும் IPX4 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (splash resistance) பாதுகாப்புடன் வருகிறது. இந்த Fire-Boltt Fire-Pods Zeus இயர்பட்ஸ் ஆனது பிளாக் குரோம் (Black Chrome), நேவி ஷிம்மர் (Navy Shimmer) மற்றும் ஒயிட் சில்வர் குரோம் (White Silver Chrome) வண்ணங்களில் வருகிறது. ஃபயர்-போல்ட் இணையதளத்தில் ரூ. 999 என்ற அறிமுக விலையுடன் காணப்பட்டுள்ளது.

ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் விலை (Fire-Boltt Fire-Pods Zeus Price):
குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த விலையில் ஃபையர்-போல்ட் ஃபையர்-பாட்ஸ் ஜீயஸ் (Fire-Boltt Fire-Pods Zeus) இயர்பட்ஸ் சாதனம் வாங்க கிடைக்கும் என்பதனால் உடனே முந்துங்கள். வெறும் ரூ.999 விலையில் TWS இயர்பட்ச்ச சாதனம் கிடைப்பதே சிறப்பு என்றால், இதில் AI ANC அம்சம், மொத்தமாக 40 மணி நேர பிளேடைம் போன்ற அம்சங்கள் எல்லாம் கிடைப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








