ரூ.799 விலையில் சூப்பர் தரம்.. அட்டகாச சவுண்ட்.. மிரளவிடும் Fire-Boltt இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் ரூ.799 விலையில் புதிய ஃபையர்-போல்ட் ஃபையர் பட்ஸ் கவாய் (Fire-Boltt Fire Buds Kawaii) இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 36 மணிநேர பிளேபெக் நேரத்தை வழங்குகிறது. ஏன் இதை நம்பி வாங்கலாம்? முழுவிபரம் இங்கே.
அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நம்முடைய பொழுதை பயனுள்ளதாக கழிக்க மிகவும் உதவுவது இயர்போன்ஸ்கள் (earbuds) தான். தொழில்நுட்ப வளர்ச்சியால் இது மருவி இப்போது ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (Truly Wireless Stereo) இயர்பட்ஸ் வரை வந்துள்ளது. TWS தயாரிப்பில் தற்போது வளர்ந்து வரும் ஃபயர்-போல்ட் (Fire-Boltt) தனது புதிய சாதனத்தை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஃபையர்-போல்ட் ஃபையர் பட்ஸ் கவாய் இயர்பட்ஸ் (Fire-Boltt Fire Buds Kawaii):
TWS இயர்பட்ஸ் என்பது ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன், லாப்டாப் போன்ற டிவைஸ்களுடன் இணைந்து செயல்படும். இதன் வரவுக்கு பின்னர் இயர்பட்ஸ்-ன் பயன்பாடு அதிகரித்துவிட்ட என்றே கூறலாம். பல முன்னணி நிறுவனங்கள் இப்போது இந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கேட்ஜெட் (electronic Gadgets) தயாரிப்பில் இறங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமான ஒன்று தான் ஃபயர்-போல்ட் (Fire-Boltt) பிராண்ட்.
தரமான தயாரிப்புகளால் இப்போது தனக்கென தனி வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஃபயர்-போல்ட் தனது இயர்பட்ஸ் வரிசையில் புதிய அறிமுகம் ஒன்றை இணைத்துள்ளது. அது தான் ஃபயர் பட்ஸ் கவாய் (Fire Buds Kawaii). இப்போது அறிமுகமான ஃபயர் பாண்ட் ஹேரா ப்ளூடூத் நெக்பாண்டிற்கு (Fire Band Hera Bluetooth neckband) பிறகு, இந்த ஃபயர் பட்ஸ் கவாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவொரு இன்-இயர் (In-ear) டைப் இயர்பட்ஸ் சாதனமாகும். இந்த இயர்பட்ஸ் 8mm டைனமிக் ட்ரைவர் (8mm dynamic driver) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து என்வைராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) ENC அம்சம் இதில் உள்ளது. இந்த அம்சம் மூலம் வாய்ஸ் கால் செய்யும்போது பேக்ரௌன்ட் நாய்ஸ் (Background noise) கேன்சல் செய்யப்பட்டு, சிறந்த கால் அனுபவத்தை வழங்குகிறது.

இன்று பெரும்பாலும் ஆன்லைனில் வேலைகளை செய்வோர் முக்கியமான மீட்டிங்களில் பங்குபெற இந்த ஃபயர் பட்ஸ் கவாய் (Fire-Boltt Fire Buds Kawaii) சாதனம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஃபயர்சார்ஜ் (FireCharge) தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஃபயர் பட்ஸ் கவாய்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் சுமார் 36 மணிநேரம் வரை அதனை பயன்படுத்தலாம்.
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இயர்பட்ஸை தொடர்ந்து ஏழு மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அவரசத்தேவைக்கும் ஏற்ற வகையில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 120 நிமிடங்கள் செயல்படும் அளவிற்கு இதன் பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான ஸ்மார்ட் போன்களும் டைப்-C போர்டுடன் வருவதால், இதன் சார்ஜிங் போர்ட் டைப்-C வடிவில் வருகிறது.
இந்த ஃபயர் பட்ஸ் கவாய் (Fire-Boltt Fire Buds Kawaii) இயர்பட்ஸின் மற்ற சிறப்பு அம்சங்களாக 40ms லோ-லேடன்ஸி கேமிங் மோட் (low-latency gaming mode), ப்ளூடூத் v5.3 மற்றும் IPX5 ஸ்ப்லாஷ் ரெசிஸ்டன்ஸ் (splash resistance) ஆகியவற்றை கூறலாம். இவற்றுடன் சேர்த்து ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் (smartwatch control), சூப்பர் சிங்க் தொழில்நுட்பம் (super sync), ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (AI voice assistant support) அம்சங்களை இது ஆதரிக்கிறது.
ஃபையர்-போல்ட் ஃபையர் பட்ஸ் கவாய் விலை (Fire-Boltt Fire Buds Kawaii Price):
போல்ட் ப்ளே ஆப் (Boltt Play App) வசதி ஆகிய அம்சங்கள் இந்த ஃபயர் பட்ஸ் கவாய் இயர்பட்ஸில் உள்ளது. ஒரு வருட வாரண்டியுடன் அறிமுகம் செய்யப்படவிருக்கும் இந்த ஃபயர் பட்ஸ் கவாய் இயர்பட்ஸின் அறிமுக விலை (Fire-Boltt Fire Buds Kawaii Price) ரூ.799 ஆகும். இது பிளாக் மற்றும் வைட் என்று இரண்டு நிறங்களில் வரவிருக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஃபயர் போல்ட் மற்றும் பிற ஆன்லைன் தளங்கள் வழியாக துவங்கும்.


Click it and Unblock the Notifications








