அசூர ஆஃபர்.. இப்போவே வாங்குனா ரூ.899 மட்டுமே.. ENC மைக்.. டூயல் பேரிங்.. 36 மணிநேர பிளேடைம்..
Fire-Boltt Fire Band Hera Neckband Headset:ஃபையர்-போல்ட் (Fire-Boltt) பிராண்ட் இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா (Fire-Boltt Fire Band Hera) என்ற நெக்பேண்ட் ஹெட்செட் (Neckband Headset) மாடலை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போது அறிமுக சலுகையாக ரூ.899 விலையில் கிடைக்கிறது.
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் அதன் ஹெட்செட் போர்ட்போலியோவில் புதிதாக ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா (Fire-Boltt Fire Band Hera) என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஃபையர்-போல்ட் ஸ்ட்ரைக் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Strike smartwatch) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 12mm டிரைவர் (12mm drivers) உடன் ENC (Environmental Noise Cancellation Technology) ஆதரவை கொண்ட தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இதன் மூலம் இந்த நெக்பேண்ட் ஹெட்செட் தரமான வாய்ஸ் கால் (Voice call) அனுபவத்தை வழங்குகிறது. இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் கனெக்ட் செய்ய அனுமதிக்கும் டூயல் பேரிங் (Dual Paring) அம்சத்துடன் வருகிறது. இது 36 மணி நேர பிளேபேக் (36 hours playback time) நேரத்தை வழங்குகிறது. இதில் டைப்-C (Type-C) பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) அம்சமும் உள்ளது.
ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா (Fire-Boltt Fire Band Hera):
இதன் மூலம் 15 நிமிட சார்ஜ்ஜில் 8 மணி நேர பிளே பேக் நேரம் கிடைக்கிறது. இந்த புதிய ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா (Fire-Boltt Fire Band Hera) நெக்பேண்ட் சாதனத்தின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், முன்பே சொன்னது போல இது 12mm டிரைவர் உடன் சக்தி வாய்ந்த ஆடியோவை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.3 (Bluetooth v5.3) இணைப்புடன் இயங்குகிறது.
இது இன்-இயர் வடிவத்தில் வரும் மேக்னட்டிக் இயர்பட்ஸ் உடன் வருகிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ஸ் அம்சத்துடன் இயங்குகிறது. இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு போன்களுக்கும் இணக்கமானது. இது இரைச்சல் இல்லாத வாய்ஸ் கால் அனுபவத்தை வழங்க என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental noise cancellation - ENC) அம்சத்தை ஆதரிக்கிறது.

ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா விலை (Fire-Boltt Fire Band Hera Price):
இது 40ms லோ-லேடன்சி மோட் (low-latency mode) ஆதரவுடன் வருகிறது. இதனால், உங்கள் கேமிங் அனுபவம் சிறக்கிறது. இது பிரத்தியேகமான வால்யூம் கண்ட்ரோல் பட்டன் (Volume Control), மியூசிக் கண்ட்ரோல் பட்டன் (Music Control), மற்றும் and கால் கண்ட்ரோல் பட்டன் (Call Controls) போன்ற பட்டன்களுடன் வருகிறது. இது IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ப்ரூப் (Splash- and Sweat-proof) ஆதரவை கொண்டுள்ளது.
இது மொத்தமாக 36 மணி நேரபிளேபேக் நேரத்தை வழங்குகிறது. நீண்ட பயன்பாட்டிற்கு இது உகந்தது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய ஃபையர்-போல்ட் ஃபையர் பேண்ட் ஹீரா (Fire-Boltt Fire Band Hera) நெக்பேண் ஹெட்செட் ரூ.2,499 என்ற அசல் விலையுடன் வருகிறது. குறுகிய கால அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக இதை ரூ.899 விலையில் இப்போது வாங்கலாம்.
இது பிளாக் ரெட் (Black Red), ப்ளூ க்ரேய் (Blue Grey), ஆக்குவா டார்க் க்ரேய் (Aqua Dark Grey), ஆரஞ்சு டார்க் க்ரேய் (Orange Dark Grey), மற்றும் லைட் க்ரேய் எல்லோவ் (Light Grey Yellow) நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது Fire-Boltt நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் உடனே வாங்க கிடைக்கின்றன. அறிமுக சலுகை குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் உடனே முந்துங்கள்.


Click it and Unblock the Notifications








