இது Smartwatch இல்லை.. குட்டி Smartphone.. இனி அதிக காசுக்கு போன் வாங்க வேண்டாம்.. வாட்ச் மட்டும் போதும்..
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் வடிவில் சிறிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream) வழக்கமான கையடக்க ஸ்மார்ட்வாட்ச் இல்ல, இது கையடக்க குட்டி ஸ்மார்ட்போன் சாதகமாகவே செயல்படுகிறது.
ஃபையர்-போல்ட் (Fire-Boltt) இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் "வ்ரிஸ்ட்போன்" (Wristphone) என்று அறிமுகம் செய்துள்ளது. வ்ரிஸ்ட் என்றால் நமது கையின் கடிகாரம் கட்டும் இடம் என்று பொருள். போன் என்பது வழக்கம் போல் மொபைல் போன் சாதனத்தை குறிப்பிடுகிறது.

இந்த ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்துடன் 4ஜி LTE (4G LTE) கனெக்டிவிட்டி அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அணைத்து அம்சங்களையும் ஆதரிக்கிறது. உண்மையை சொல்ல போனால், இந்த ஸ்மார்ட்வாட்சில் OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream):
ஆம், இதில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ சினிமா (JioCinema), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), போன்ற OTT தளங்களின் வீடியோக்களை ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளேவில் பிளே செய்து பார்க்க முடியும். இது மற்ற ஸ்மார்ட்வாட்ச் போல் இல்லாமல், உண்மையான ஸ்மார்ட்போன் போல் செயல்படுகிறது.
இந்த வ்ரிஸ்ட்போனில் இருந்து நீங்கள் நேரடியாக வாய்ஸ் கால் அழைப்புகளை (Voice call) மேற்கொள்ளலாம். அதாவது உங்கள் போனுடன் பேர் (Pair) செய்யாமலே உங்களால் அழைப்புகளை ஏற்க முடியும் மற்றும் நிராகரிக்க முடியும். அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள பல ஆப்ஸ்களுடன் இணக்கமாகிறது.

இதில் கூடுதல் பிட்னஸ் ட்ராக்கிங் (Fitness Tracking) பயன்பாடுகள் பயன்படுத்த கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம் பற்றி பார்க்கையில், இந்த ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream) ஸ்மார்ட்வாட்ச் 2.02" இன்ச் உடன் 320 x 386 பிக்சல் (pixels) கொண்ட 60Hz டிஸ்பிளேவை (Display) 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (600 nits peak brightness) உடன் வழங்குகிறது.
இது குவாட் கோர் ஆரம் கார்டெக்ஸ் A7 MP சிப்செட் (Quad-core Arm Cortex-A7 MP chipset) உடன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் (2GB of RAM and 16GB Storage) அம்சத்தை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 8.1 (Android 8.1) தளத்தில் இயங்குகிறது. இது 4G LTE நானோ சிம் (nano SIM), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் கேம்ஸ் கூட விளையாடலாமா? (You can even play games on this smartwatch):
இந்த ஸ்மார்ட்வாட்ச், வாட்சில் இருந்தே நேரடியாக ஜிமெயில் (Gmail), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp), ஸ்மோடோ (Zomato), ஸ்பாட்டிஃபை (Spotify), மித்ரா (Myntra), பம்பில் (Bumble) போன்ற ஆப்ஸ்களை அணுக அனுமதிக்கிறது. இந்த ஃபையர்-போல்ட் ட்ரீம் (Fire-Boltt Dream) ஸ்மார்ட்வாட்ச் அல்லது வ்ரிஸ்ட்போன் சாதனத்தில் நீங்கள் கேம்ஸ் கூட விளையாடலாம்.
மிகவும் பிரபலமான சப்வே சர்ஃபர் (Subway Surfers), டெம்பிள் ரன் (Temple Run), கேண்டி க்ரஷ் (Candy Crush) போன்ற கேஸ்களை எல்லாம் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆதரிக்கிறது. இது 12 ஸ்ட்ராப் நிறத்துடன் ரூ.5,999 விலையில் இப்போது வாங்க கிடைக்கிறது. இதன் லெதர் ஸ்ட்ராப் மாடல் ரூ.6,299 விலையிலும், இதன் மெட்டல் ஸ்ட்ராப் மாடல்கள் ரூ.6,499 விலையிலும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








