Home
News

ரொம்ப ரக்கட்.. கம்மி பட்ஜெட்ல.. AMOLED டிஸ்பிளே.. 400mAh பேட்டரி.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

இந்திய ரக்கட் வாட்ச் பிரியர்களுக்காகவே கம்மியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங், ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஃபயர் போல்ட் க்ரூஸேடர் (Fire Boltt Crusader) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபயர் போல்ட் க்ரூஸேடர் அம்சங்கள் (Fire Boltt Crusader Specifications): இந்த வாட்ச் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு அவுட்டோர் ரக்கட் எடிஷன் (Outdoor Rugged Edition) ஸ்மார்ட்வாட்ச் என்பதால், அதற்கேற்ப மெட்டாலிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் கன்ட்ரோலுக்கான 2 புஸ் பட்டன்கள் (2 Push Buttons) கொடுக்கப்பட்டுள்ளன.

ரொம்ப ரக்கட்.. கம்மி பட்ஜெட்ல.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

இந்த வாட்ச்சில் மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) மற்றும் மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன. இதில் ரன்னிங் (Running), ஸ்விம்மிங் (Swimming), ஜாக்கிங் (Jogging), சைக்கிளிங் (Cycling) போன்ற பல ஆக்டிவிட்டி மோட்கள் வருகின்றன. இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் இருப்பதால், இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) வருகிறது. இதன் மூலம் காலிங் கன்ட்ரோல் மற்றும் அலாரம் செட் செய்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suite) வருகிறது. ஆகவே, 4 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) மற்றும் வுமன் ஹெல்த் மானிட்டர் (Women Healtg Monitor) ஆகியவை இருக்கின்றன. இந்த ஃபயர் போல்ட் க்ரூஸேடர் வாட்ச்சில் பீக் ஃபிட்னஸ் பார்ட்னர் (Peak Fitness Partner) சப்போர்ட் வருகிறது.

இதன் மூலம் யோகா (Yoga), எலிப்டிக்கல் (Elliptical) போன்ற ஆக்டிவிட்டிகளை கணக்கீடு செய்து கொள்ள முடியும். அதோடு டிரிங்கிங் வாட்டர் (Drink water ) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary remainder) சப்போர்ட் வருகிறது. இந்த வாட்ச் மூலம் மியூசிக் கன்ட்ரோல் (Music Control), கேமரா கன்ட்ரோல் (Camera Control) செய்து கொள்ள முடியும்.

இன்பில்ட் கேம்ஸ் (Inbuilt games) வருகின்றன. மேலும், வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வரும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) மூலம் கால் (Call), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை (App Notification) தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஃபயர்போல்ட் க்ரூஸேடர் வாட்ச் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டுள்ளது. சிறந்த பேக்கப்புக்காக 400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் போல்ட் க்ரூஸேடர் வாட்ச் பிளாக் (Black), ஆரஞ்ச் (Orange), க்ரீன் (Green) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இன்று (செப்டம்பர் 9) முதல் ஃபயர்போல்ட்.காம் (Fireboltt.com) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.2,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நல்ல விலையில், ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த ஃபயர் போல்ட் க்ரூஸேடர் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Fire-Boltt Crusader Smartwatch AMOLED Display, Rugged Design, Sales From September 9 Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X