முரட்டு மிரட்டல்.. பிரீமியம் ரக்கட் டிசைன்.. அமோலெட் டிஸ்பிளே.. பட்ஜெட் வேற கம்மி.. எந்த மாடல்?
இந்திய ரக்கட் பிரியர்களுக்காவே பிரத்யேகமான மெட்டல் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், 4 ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பட்டாசான அம்சங்களுடன் ஃபயர்-போல்ட் கமாண்டோ (Fire Boltt Commando) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
அண்மை காலமாக மார்கெட்டுக்கு வரும் பல ஸ்மார்ட்வாட்ச்கள் எவ்வளவு பிரீமியமான அம்சங்களை கொண்டிருந்தாலும் டிசைன் நன்றாக இல்லாத காரணத்தால் விற்பனையில் வரவேற்பு பெறாமல் போய்விடுகின்றன. இதனால், ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள், அம்சங்களுடன் புதுப்புது டிசைனிலும் வாட்ச்களை அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன. அந்த வரிசையில், பிரீமியம் ரக்கட் டிசைனில் மிலிட்டரி தரத்தில் ஃபயர்-போல்ட் கமாண்டோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபயர்-போல்ட் கமாண்டோ ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் (Fire Boltt Commando Smartwatch Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன்-டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். இதில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) வருகின்றன.
இந்த வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சம் வருகிறது. இதற்காக இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு கால் ஹிஸ்டரி (Call history), குயிக் டயல் பேட் (Quick dial pad) மற்றும் சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync contacts) அம்சங்கள் வருகின்றன. இதன் பக்கவாட்டில் ரோட்டேட்டிங் கிரவுண் (Rotating crown) மற்றும் பட்டன் (Button) இடம்பெற்றுள்ளது.
பாடி ஆக்டிவிட்டி கண்காணிப்புக்காக 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports modes) வருகின்றன. இந்த வாட்ச்சை வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும். இதுவொரு ரக்கட் மாடல் என்பதால், மற்ற ஸ்மார்ட்வாட்ச்களைவிட கூடுதலாக IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 4 ஹெல்த் மானிட்டர்கள் (Health monitors) வருகின்றன. அந்த வகையில், ஸ்லீப்பிங் மானிட்டர் (Sleeping monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart rate monitor), வுமன் ஹெல்த் மானிட்டர் (Women health monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு டிரிங்கிங் வாட்டர் (Drink water) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary remainder) வருகிறது.
இந்த வாட்ச்சை ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்தால், கிளாசிக் மோடில் (Classic Mode) 8 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 5 நாட்களுக்கும் ஸ்டாண்ட்பை மோடில் (Standby Mode) 25 நாட்களும் பேக்கப் கிடைக்கும்.
மேலும், ஸ்மார்ட் நோட்ஃபிகேஷன் (Smart Notifications), வெதர் அப்டேட் (Weather update), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm), மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் (Music And Camera Control) போன்ற அம்சங்களும் வருகின்றன. இந்த ஃபயர்-போல்ட் கமாண்டோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக் (Black), கேமோ கிரே (Camo Grey), கேமோ கிரீன் (Camo Green), கோல்டு பிளாக் (Gold Black) மற்றும் ஆரஞ்சு (Orange) ஆகிய 5 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த வாட்ச்சின் விலை ரூ.2999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஃபயர்போல்ட்.காம் (Fireboltt.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிரீமியம் தரத்தில் நல்ல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த ஃபயர் போல்ட் கமாண்டோ சரியா தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








