Home
News

பார்த்ததும் வாங்க தூண்டும் டிசைன்! வேண்டாமென்று சொல்ல தோனாதா விலையில் Fire-Boltt Collide!

Fire-Boltt நிறுவனம் இப்போது புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது Fire-Boltt Collide என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதன் சூப்பர் கூல் டிசைனிற்கும், இதன் விலைக்கும், இந்த ஸ்மார்ட் வாட்சை யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள்.

ஃபயர்-போல்ட் கோலைட் என அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சிற்கு இப்போதே இந்தியாவில் மிகப் பெரிய ஹைப் உருவாகியுள்ளது. Fire-Boltt Collide ஆனது வழக்கத்திற்கு மாறான வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.39' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த வாட்ச் 100-க்கும் மேற்பட்ட இன்பில்ட் வாட்ச் பேஸ் அம்சங்களை கொண்டுள்ளது. இது புளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது.

பார்த்ததும் வாங்க தூண்டும் டிசைன்! Fire-Boltt Collide விலை என்ன?

இதற்கான இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. இது AI வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Fire-Boltt Collide ஸ்மார்ட்வாட்ச்சின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வாருங்கள், இந்த வாட்ச் நமக்கு என்ன அம்சங்களை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

இந்த Fire-Boltt Collide ஸ்மார்ட் வாட்சின் விலை பற்றி பேசுகையில் இது இந்தியாவில் ரூ.2,999 என்ற விலையில் இப்போது வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை என்று நிறுவனம் ரூ.15,999 என்று நிறுவனம் லேபிள் செய்துள்ளது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வாட்சை வெறும் ரூ.1333 என்ற முன்பணம் செலுத்தியும் நீங்கள் வாங்கலாம்.

மிச்ச தொகையை 0% வட்டியுடன் மாதாந்திர தவணையிலும் செலுத்தலாம் என்ற விருப்பத்தை நிறுவனம் இப்போது வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சை இப்போது மேட் பிளாக், கிரே/பிளாக், சில்வர் பிளாக் சிலிகான் ஸ்ட்ராப்கள் மற்றும் பிரவுன் லெதர் ஆப்ஷன்களில் நீங்கள் வாங்கலாம். இதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம். ஏப்ரல் 6, 2023 முதல் பல கேட்ஜெட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

பார்த்ததும் வாங்க தூண்டும் டிசைன்! Fire-Boltt Collide விலை என்ன?

ஸ்மார்ட்வாட்ச்சின் டிஸ்ப்ளேவில் தொடங்கி, Fire-Boltt Collide ஆனது 1.39-inch HD Retina-level display உடன் 500 nits பிரகாசம் கொண்டது. இந்த வாட்ச் ஒரு ஸ்போர்ட்டி டிசைனுடன் வருகிறது. இது 10.7மிமீ மெல்லிய பாடி வடிவமைப்புடன் ரொடேட்டிங் கிரௌன் உடன் வருகிறது. இது புளூடூத் 5.2 வழியாக ஃபோன் அழைப்புகளைச் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. கால் ஹிஸ்டரி, குயிக் டயல் பேட் மற்றும் சிங்க் காண்டாக்ட் போன்ற ஆதரவையும் கொண்டுள்ளது.

இந்த Fire-Boltt Collide வாட்ச் 70+ ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, Fire-Boltt Collide ஆனது 330mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேக்அப் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த வாட்ச் நிறுவனத்தின் தனியுரிம ஃபயர்-போல்ட் ஹெல்த் சூட் உடன் வருகிறது. ஸ்லீப் மானிட்டர், இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் SpO2 கண்காணிப்புக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

Fire-Boltt Collide ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், இன்-பில்ட் கேம்களை ஆதரிக்கிறது. இறுதியாக, இந்த Fire-Boltt Collide ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தில் கால்குலேட்டர், Find My Phone ஆதரவு, மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை முன்னறிவிப்புகள், டைமர், அலாரம் போன்ற அம்சங்கள் இடம்பெறுகிறது. உங்களுக்கு இந்த மாடலில் எந்த வண்ண வேரியண்ட் பிடித்தது என்று கூறுங்கள்.

Best Mobiles in India

English summary
Fire-Boltt Collide Launched In India With Smart Bluetooth Calling and Retina Level Display At Rs 2999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X