ரக்டு லுக்.. ஆப்பிள் வாட்ச் ஸ்ட்ராப்.. சூப்பர் அம்சங்கள்.. விலையோ கம்மி.. புது Fire-boltt Asteroid..
புதிய ஸ்மார்ட்வாட்ச்களை சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் ஒரு பிரபலமான ஸ்மார்ட்வாட்ச் பிராண்டாக ஃபயர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனம் திகழ்கிறது. இப்போது, ஃபயர்-போல்ட் நிறுவனம் ஃபயர்-போல்ட் வோக் (Fire-Boltt Vogue) உடன் இணைந்து ஃபயர்-போல்ட் ஆஸ்டிராய்டை (Fire-boltt Asteroid) என்ற சாதனத்தை வெளியிட்டுள்ளது.
ஃபயர்-போல்ட் ஆஸ்டிராய்டு (Fire-Boltt Asteroid) ஆனது கரடுமுரடான வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் ஒரு ரக்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இது 1.43' இன்ச் கொண்ட ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது IP67 மதிப்பீடுடன், புளூடூத் வாய்ஸ் காலிங் போன்ற அட்டகாசமான அம்சங்களை நியாயமான விலைக்குள் பேக் செய்து அசத்தியுள்ளது.

சரி, இப்போது இந்தியாவில் Fire-Boltt Asteroid விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன? என்ற விபரங்களை பார்க்கலாம். ஃபயர் -போல்ட் ஆஸ்டிராய்டு இந்திய நுகர்வோருக்காக ரூ.2,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் 28 முதல் அமேசானில் (Amazon), நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாங்க கிடைக்கும்.
ஃபயர்-போல்ட் ஆஸ்டிராய்டு சாதனம் நான்கு அற்புதமான வண்ணங்களில் கிடைக்கும். இதில் கோல்டு பிளாக் (Gold Black), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange) மற்றும் பிளாக் (Black) ஆகிவை அடங்கும். ஃபயர்-போல்ட் ஆஸ்டிராய்டு ஒரு உலோகக் கட்டமைப்பைக் கொண்ட மிகவும் உறுதியான ரக்டு ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் ஆகும். இது மெலிதான பெசல்கள், கிரௌன் பட்டன், ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் பாணியை தழுவும் ஸ்ட்ராப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Fire-Boltt Asteroid ஆனது 466 × 466 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 1.43' இன்ச் கொண்ட ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் பேட்டரி மற்றும் சார்ஜிங் பிரத்தியேகங்களைப் பற்றிய குறிப்பிட்ட தகவலை நிறுவனம் வழங்கவில்லை, ஆனால் சாதனம் "குறைந்த மின் நுகர்வுடன்" வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஃபயர்-போல்ட் ஹைலைட் செய்துள்ளது.
ஃபயர்-போல்ட் ஆஸ்டிராய்டு சாதனம், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவுடன் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கருடன் புளூடூத் அழைப்பை ஆதரிக்கிறது. இது IP67 மதிப்பீட்டுடன் ஃபயர்-போல்ட் சிறுகோள் 30 நிமிடங்களுக்கு 1 மீட்டர் ஆழம் வரை புதிய நீரில் மூழ்கடிக்கப்படலாம். ஸ்மார்ட்வாட்ச் கூடுதலாக இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் (SpO2) அளவீடு, தூக்க கண்காணிப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு உள்ளிட்ட நல்வாழ்வு செயல்பாடுகளை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 123 -க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் பயன்முறைகளை ஆதரிக்கிறது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வெதர் ரிப்போர்ட், ஸ்டாப்வாட்ச், அலாரம், மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் நிறுவனம் ஃபயர்-போல்ட் வோக் (Fire-Boltt Vogue) ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ஃபயர்-போல்ட் வோக் ஸ்மார்ட்வாட் 2.01' இன்ச் கொண்ட பெரிய HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இது பல்வேறு வாட்ச் ஃபேஸ் விருப்பங்களுக்கு இடமளிக்கிறது. ஒருங்கிணைந்த மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கருடன், ஃபயர்-போல்ட் வோக் புளூடூத் அழைப்புகள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவை எளிதாக்குகிறது. இது இதயத் துடிப்பு, இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, ஸ்லீப் மானிட்டர், உடல் வெப்பநிலை ஆகியவற்றைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் அரை மணி நேரம் 1.5 மீட்டர் வரை நீரில் மூழ்குவதைத் தாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரூ. 2,199 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சாதனங்களை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








