Home
News

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் எப்படி செயல்படுகிறது என்பது தெரியுமா?

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் செயல்படும் விதம்

By Siva

கைரேகை என்பது நாம் கேள்விப்படாத புதிய டெக்னாலஜி இல்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றும் ஒருசில இடங்களில் நாம் கைரேகை வைத்த அனுபவம் இருக்கும். ஆனால் அதையே டிஜிட்டலாக மாற்றி கொண்டு வந்துள்ள டெக்னாலஜிதான் தற்போது நாம் மொபைல்போன்களில் பயன்படுத்தும் பிங்கர்பிரிண்ட் சென்சார்.

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் எப்படி செயல்படுகிறது என்பது தெரியுமா?

நம்முடைய கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டு பயோமெட்ரிக் மூலம் கைரேகை டேட்டாக்கள் சேமிக்கப்படுவதற்கு பெயர் தான் இந்த பிங்கர் பிரிண்ட் சென்சார். இந்த பிங்கர் பிரிண்ட் சென்சார் தற்போது செல்போனில் மட்டுமின்றி அலுவலகத்தில் வருகை பதிவேடு, ஆதார் அட்டை உள்பட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது,

இதன் டெக்னாலஜி மிக எளிமையானது. நமது கைரேகைகள் எலக்ட்ரானிக் கோட் ஆக மாற்றப்பட்டு நமது டேட்டபேஸில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு முறையும் நமது கைரேகை அதில் பதிவு செய்யும்போது ஸ்கேனர் உதவியால் நமது டேட்டாபேஸ்கள் நமது வருகை பதிவையோ இன்ன பிற செயல்களையோ உறுதி செய்யும். இந்த பிங்கர் பிரிண்ட் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்

ஆப்டிக்கல் ஸ்கேனர்:

ஆப்டிக்கல் ஸ்கேனர்:

நீங்கள் கைரேகை மிஷினில் உங்கள் விரலை வைத்தவுடன் அதில் உள்ள ஆப்டிக்கல் ஸ்கேனர் உடனே ஒரு பிரைட்டான லைட்டை வெளிப்படுத்தி அதன் மூலம் உங்கள் ரேகையை டிஜிட்டல் போட்டோவாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்

CCD என்று கூறப்படும் சார்ஜ் கப்பிள் டிவைஸ் என்னும் மைக்ரோ சிப் அல்லது CMOS என்னும் இமேஜ் சென்சார் ஸ்கெனரின் உதவியால் டிஜிட்டல் இமேஜ் ஆக மாற்றும்

இந்த இமேஜ் தானாகவே கைரேகையை மட்டும் தனியாக எடுத்து அதை பார் கோட் ஆக மாற்றும். இதற்கு சில பேட்டர்ன் மேட்சிங் சாப்ட்வேர் உதவுகிறது.

கெப்பாசிட்டிவ் ஸ்கேனர்:

கெப்பாசிட்டிவ் ஸ்கேனர்:

இந்த ஸ்கேனர் உங்கள் கைரேகையை எலக்ட்ரிக்கல் மூலம் அளவு செய்கிறது. இந்த அளவின் மூலம் உங்கள் கைரேகையில் உள்ள ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு இடைவெளியும் மிக துல்லியமாக அளக்கப்படுகிறது.

ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள டச் ஸ்க்ரீன் ஸ்கேனர்களின் வகையை சேர்ந்தது தான் இந்த கெப்பாசிட்டி ஸ்கேனர் என்பது குறிப்பிடத்தக்கது

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்ற அனைத்து பாதுகாப்பு வசதிகளை விட மிகவும் பாதுகாப்பானது. இது எப்படி என்பதை பார்ப்போம்

முதலில் டிவைஸில் உள்ள LED வரிசை உங்கள் கைரேகையை பிரைட்டான லைட் முலம் ஸ்கேன் செய்கிறது.

கைரேகையில் சென்ற பிரைட்டான லைட் மீண்டும் திரும்பி வந்து CCD அல்லது CMOS இமேஜ் சென்சாரில் உள்ள கிளாஸில் பதிவு செய்கிறது.

பின்னர் அல்காரிதம் மூலம் அந்த இமேஜ் பிரைட் மற்றும் லைட் என மாறி மாறி டெஸ்ட் செய்கிறது. இதன் பின்னர் டிவைஸில் இருந்து ஒரு பீப் சத்தம் கேட்கும். பிராஸஸ் முடிந்துவிட்டதை இந்த பீப் சத்தம் உறுதி செய்கிறது.

ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் அல்லாமல் வேறு யாராவது தங்களது பிங்கரின் மூலம் முறைகேடாக செயல்பட முடிந்தால், அந்த கைரேகையின் வரிகள் மற்றும் கவுண்ட்கள் சமமில்லாத காரணத்தால் மீண்டும் முதல் ஸ்டெப்புக்கு தள்ளிவிடும். எனவே இந்த முறையில் யாரும் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை.

இந்த இரண்டு டெஸ்ட்களுக்கு பின்னர் ஸ்கேனர் ஓகே என்று சொல்லும் வகையில் ஒரு பீப் சத்தம் கொடுக்கும் அல்லது வேறு வித கலரில் LED எரியும். இதை வைத்து பிராசஸ் முடிந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்பட்ட இமேஜ்கள் கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்பட்டு அடுத்தகட்ட பிராஸசஸ் செய்ய உதவுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fingerprint security system is not the latest one. We have seen such systems long ago where the fingerprint of a person is registered on paper using inkpad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X