ரேஷன் கடைகளில் மீண்டும் இதேமுறை- இனி பொருட்கள் விநியோகம் இப்படிதான்!

|

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை அறிவித்தது. இதன் ஒருபகுதியாக நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த முறை மீண்டும் இன்றுமுதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் மக்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதிவு செய்வது அவசியம். இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளி கடைபிடிப்பது, சானிட்டைஷர் பயன்படுத்துவது என்பது கட்டாயமாக்கப்பட்டது.

கொரோனா உதவித் தொகை

கொரோனா உதவித் தொகை

கொரோனா உதவித் தொகையாக முதல் தவணையாக ரூ.2000 எனவும் இரண்டாவது தவணையாக ரூ.2000 என மொத்தம் ரூ.4000 தமிழ அரசு வழங்கி வருகிறது. இதில் இரண்டாவது தவணை வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல் தவணை ரூ.2000 98.4% குடும்ப அட்டை தாரர்கள் நிவாரண தொகை பெற்றுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

14 வகை அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு

14 வகை அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு

குடும்ப அட்டை தாரர்கள் ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணை தொகை ரூ.2000 உடன் 14 வகை அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தேவைகளுக்கும் குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) என்பது முக்கிய ஆவணங்களில் பிரதான ஒன்று. அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்ட்கள் மூலம் ரேஷன் பொருட்கள் உட்பட அரசு திட்ட நன்மைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன.

கைரவிரல் ரேகை பதிவுமுறை

கைரவிரல் ரேகை பதிவுமுறை

கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்ததால் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் நோய் தடுப்பு நடவடிக்கையாக கைரவிரல் ரேகை பதிவுமுறை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிவாரண வழங்கும் பணிகள் நிறைவு பெற்றதன் காரணமாக இன்று மீண்டும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை

கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணத் தொகை வழங்கும் சமயத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைக்கு வரும்போது ஏற்படும் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினை பெற்றுச் செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பு நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டை

புதிய மின்னணு குடும்ப அட்டை

புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணபித்த மனுக்கள் அரசால் அறிவிக்கப்பட்டு கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் நிலையில் புதிய மனுக்குள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும். எனவே நோய் தொற்று பரவல் காலத்தில் களப்பணியாளர்கள் விசாரணைக்கு செல்ல முடியாக சூழ்நிலை காரணமாக தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கைவிரல் ரேகை நடவடிக்கை செயல்முறை

கைவிரல் ரேகை நடவடிக்கை செயல்முறை

மேலும் ஜூலை 1 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும், கைவிரல் ரேகை நடவடிக்கையை செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

File Images

Best Mobiles in India

English summary
Fingerprint registration to be Resumed in Tamilnadu Ration Shops

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X