சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

Written By:

இனி சிம் கார்டு வாங்குவதற்கான விதிகளை இறுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளூர் ஆட்களை தொடர்பு கொள்ள இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இது போன்று சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் இனி கைநாட்டு அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே போலியான நபர்களின் பெயரில் சிம் கார்டுகள் கிடைப்பதை தவிர்க்க புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்திருந்தது.

அதன்படி முறையான முகவரி மற்றும் அடையாள சான்று இல்லாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்ய செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.அத்துடன் இந்த தடையை மீறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இருப்பினும் போலி சான்றிதழ்கள் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் எதிரொலியாக சிம் கார்டுகள் வாங்க கைரேகை பதிவுகளை கட்டாயமாக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வந்துள்ளது.

Click Here For New Smartphones, Tablets and Laptops Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்


இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்


சிம்கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கைரேகையோ அல்லது இதர பயோமெட்ரிக் பதிவுகளையோ வாங்குவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்


செல்போன் சேவை நிறுவனங்களிடம் கலந்தாலோசித்த பின் உள்துறை அமைச்சக கடிதத்துக்கு பதில் அளிக்கப்படும் என தொலைதொடர்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்


ஆதார் அட்டை பெறுவதற்கு கைரேகை எப்படி கட்டாயமோ அது போல் விரைவில் சிம் கார்டு வாங்குவதற்கும் கைநாட்டு கட்டாயமாக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்

சிம் வாங்க இனி கைரேகை வைக்கணும்


இப்படி நீங்க வெச்சிங்கனா அவங்க வேற எதாவது புதுசா கண்டுபிடிப்பாங்கன்னு நீங்க சொல்றது புரியுது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்