Home
News

எங்கள் நிறுவனத்தின் போன்களை ஹேக் செய்தால் 1மில்லியன் டாலர் பரிசு.! கூகுள் அதிரடி.!

இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் அதிகமாக பயன்படுத்தும் போன்கள் என்றால் அது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தான். அதன்படி இந்த ஆண்ட்ராய்டு வடிவமைக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். கூகுள் நிறுவனம் கடந்த சில வருடங்களாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

 கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தான் தயாரிக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மல்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். அறிவிப்பின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 4 போன்களை நூதன முறையில் ஹேக் செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாஸ்வேர்டை இது பாதுகாக்கும்

பாஸ்வேர்டை இது பாதுகாக்கும்

குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் பரிசை வெல்ல இந்த போன்களிலல் இருக்கும் டைடன் எம் என்ற பாதுகாப்பு சிப்-ஐ முறியடிக்க வேண்டியிருக்கும். மேலும் இது ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு சிப்களுக்கு இணையான ஒரு பாதுகாப்பு சிப் ஆகும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஹேக்கர் ஒரு மால்வேரை ஆண்ட்ராய்டு மொபைலில் ஏற்றப் பார்க்கிறார் என்றால் உடனடியாக பாஸ்வேர்டை இது பாதுகாக்கும்.

லாக் ஸ்க்ரீன் பை-பாஸ்

லாக் ஸ்க்ரீன் பை-பாஸ்

மேலும் இதனுடன் ஆண்ட்ராய்டின்Developer preview-ல் இருக்கும் கோளாறுகளைக் கண்டுபிடித்தால் 1.5டாலர்கள் மல்லியன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. பின்பு போனில் உள்ள தகவல்களை திருடுதல் மற்றும் லாக் ஸ்க்ரீன் பை-பாஸ் போன்ற குறிப்பிட்ட வகையான தாக்குதல்களுக்கு 5,00,000டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றதொருபோட்டியை ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது.

நவம்பர் 21

நவம்பர் 21

குறிப்பாக நவம்பர் 21-ம் தேதியிலிருந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு தொகை செலலும் எனவும், எதற்கெல்லாம் என்ன பரிசுத் தொகை என்பதை கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பரிசுத் திட்டத்தின் விதிமுறை பக்கத்தில் சென்று பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் தற்போது வரை அப்டேட்ட செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிக்சல் சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 12மாதங்களில் மட்டும்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் மொபைல் சாதனங்களை பாதுகாப்பை அதிகரிக்க இது போன்ற 'Bug Bounty' போட்டிகளை நடத்தி பரிசு வழங்கும். கூகுள் நிறுவனம் கடந்த 12மாதங்களில் மட்டும் $1.5 மில்லியனை இத்தகைய ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டு

தகவல் திருட்டு

அதில் அதிகபட்ச பரிசுத் தொகையை குவாங்க் காங்க் என்பவருக்கு ஒரே டச்சில் பிக்சல் 3-ஐ ஹேக் செய்ததற்காக வழங்கியது. குறிப்பாக தகவல் திருட்டு மற்றும் அடுத்தவரின் மொபைலை ஹேக் செய்வது போன்ற செயல்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகிறது, எனவே தான் இதை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளயிடுகிறது.

Best Mobiles in India

English summary
Find a Bug in Google Phone and Win 1 Million dollar Price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X