Home
News

ஹா ஹா ஹா., இந்தியாவுக்கு வந்த ப்ளூடிக் சேவை! ட்விட்டர் பயனர்களே ரெடியா? விலை, பலன்கள் என்ன?

Twitter Blue சந்தா சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ப்ளூ டிக் சேவை பெற அனைத்து பயனர்களும் விரைவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ப்ளூ டிக் அணுகலின் விலை மற்றும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

Twitter Blue சந்தா சேவை

Twitter Blue சந்தா சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுநாள் வரை ட்வீட்டர் ப்ளூ சந்தா சேவை குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஹா ஹா., இந்தியாவுக்கு வந்த ப்ளூடிக் சேவை! ட்விட்டர் பயனர்களே ரெடியா?

ப்ளூ நிற டிக் பேட்ஜ்

சந்தா கட்டணத்தின் மிகப் பெரிய நன்மைகளில் ஒன்று உங்களுக்கு ப்ளூ நிற டிக் பேட்ஜ் கிடைப்பதே ஆகும். ஒருவரின் அதிகாரப்பூர்வ கணக்கை இது உறுதி செய்யும். இதுதான் தெரியுமே என்றால் கூடுதலாக பல நன்மைகளும் இந்த ப்ளூடிக் சேவையில் வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள்

இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி, அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் ட்விட்டர் ப்ளூ சேவை கிடைக்கிறது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் ப்ளூ சந்தா சேவை அணுகலாம்.

ட்வீட்டர் ப்ளூ சந்தா கட்டணம் இந்தியாவில் எவ்வளவு?

ட்விட்டர் பயனர்கள் ட்வீட்டர் ப்ளூ சந்தாவை இணையப் பதிப்பின் வழியாக மட்டுமே பெற முடியும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முழுமையான செயல்பாடுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போதுவரை வெளியாகியுள்ள சில அறிக்கையின்படி, இணைய வழியாக ப்ளூ மெம்பர்ஷிப் பெற விலை மாதத்திற்கு ரூ.650 செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. வருடாந்திர திட்டத்தை பெற்றால், ட்விட்டர் ப்ளூ சேவை ஆண்டுக்கு ரூ.6800 என கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மாதத்திற்கு இதன் விலை ரூ.566.67 என கிடைக்கிறது.

ஹா ஹா., இந்தியாவுக்கு வந்த ப்ளூடிக் சேவை! ட்விட்டர் பயனர்களே ரெடியா?

ப்ளூ நிற டிக் பெற இது கட்டாயம்

ட்விட்டர் ப்ளூ சந்தா பயனர்களுக்கு பல அம்சங்கள் வழங்கப்படுகிறது என்றாலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ட்விட்டரின் ப்ளூ சந்தா உடன் ப்ளூ நிற சரிபார்ப்பு பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ட்விட்டரில் ப்ளூ நிற டிக் கொண்ட அனைத்து பயனர்களும் இனி இந்த அம்சத்தை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும். இதன்கீழ் வரும் புதிய சந்தாதாரர்களும் ப்ளூ நிற டிக் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ப்ளூடிக் சேவையில் கிடைக்கும் நன்மைகள்

ட்விட்டர் ப்ளூ சந்தா சேவையில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், ப்ளூ சந்தா உறுப்பினர்களுக்கு பெயருக்கு பின்னால் ப்ளூ டிக் குறி வழங்கப்படும். அதேபோல் ப்ளூ சேவை பயனர்களுக்கு undo ஆப்ஷன் வழங்கப்படுகிறது. பயனர்கள் பதிவிட்ட ட்வீட்டை இதன்மூலம் undo செய்யலாம். இது எடிட் பட்டன் அல்ல என்பது நினைவில் இருக்கட்டும். ட்வீட் பதிவிட்ட பிறகும் அதை மறுபரீசலனை செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது. குறுகிய காலத்துக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ப்ளூ மெம்பர்ஷிப் பயனர்கள் 60 நிமிடங்களுக்கும் மேலான வீடியோக்களையும், 2 ஜிபி வரை அளவுள்ள வீடியோக்களை பதவேற்றலாம் என கூறப்படுகிறது.

ஹா ஹா., இந்தியாவுக்கு வந்த ப்ளூடிக் சேவை! ட்விட்டர் பயனர்களே ரெடியா?

விளம்பரங்கள் இல்லா தனி ரீசார்ஜ் திட்டம்

ட்விட்டரை விளம்பரங்கள் இன்றி அணுகும் வகையிலான புதிய சந்தா திட்டத்தை மஸ்க் விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரி, முன்னதாகவே ப்ளூ டிக் சந்தா சேவை ஒன்று இருக்கிறதே என தோன்றலாம். இங்கே தான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது. ப்ளூ டிக் சந்தா பயனர்களுக்கு பிற சாதாரண பயனர்களை ஒப்பிடும் போது பாதி விளம்பரங்கள் தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது. விளம்ரங்கள் இல்லாமல் ட்விட்டரை பயன்படுத்துவதற்கு தனியாக ஒரு சந்தாத் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டங்களுக்கான பிளான்கள் 2023க்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Finally Twitter Blue Subscription Launched in India For Android, iOS Users: Price and Special Feature Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X