இறுதியாக வழிக்கு வந்தது டுவிட்டர்- குறை தீர்க்கும் அதிகாரி நியமனம்: இனி இந்த ஐடி மூலம் புகார் அளிக்கலாம்!

|

இறுதியாக டுவிட்டர் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்து அறிவித்துள்ளது. நாட்டில் விதிக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரபல சமூகவலைதளமான வினய் பிரகாஷ் புதிய குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்துள்ளது. டுவிட்டரின் குறைதீர்க்கும் அதிகாரியான தர்மேந்திர சதுர் இந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் புதிய விதிகள் அடிப்படையில் இந்தியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்கவில்லை என்றால் சட்டரீதியான விளைவுகளஅ சந்திக்க நேரிடும் என டுவிட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அரசு விதிகளை ஏற்றதற்கான ஒரு மாதகால வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

குறை தீர்க்கும் அதிகாரியாக வினஸ் பிரகாஷ் நியமனம்

குறை தீர்க்கும் அதிகாரியாக வினஸ் பிரகாஷ் நியமனம்

டுவிட்டரின் இணையதளத்தில் குறை தீர்க்கும் அதிகாரியாக வினஸ் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மின்னஞ்சல் ஐடியும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. குறை தீர்க்கும் அதிகாரி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பயனர்கள் grievance-officer-in@twitter.com என்ற ஐடி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதில் அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. சமூகவலைதளங்களுக்கு என மத்திய அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகளுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சமூகவலைதளங்கள் பிப்ரவரி 25முதல் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அதை நிறைவேற்ற 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டு

டுவிட்டர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மூன்று மாதங்கள் வழங்கப்பட்டதாகவும் அதன்பின்பும் நிலத்தின் சட்டத்தை மீறுவதாகவும் டுவிட்டர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரை நியமித்தது. இந்த நிலையில் இவர் நியமித்த ஓரிரு நாட்களில் பதவியில் இருந்து விலகினார்.

புதிய விதிகளை நியமிப்பதில் தாமதம்

புதிய விதிகளை நியமிப்பதில் தாமதம்

புதிதாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப சட்டங்களை பின்புற்றுவதில் டுவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்று உள்ளூரில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதாகும். இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி

குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும் என புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

Best Mobiles in India

English summary
Finally Twitter Appoints Vinay Prakash as Grievance Officer of India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X