Home
News

ஒருவழியாக Samsung அந்த முடிவை எடுத்துவிட்டது.. டிஸ்பிளேவில் முக்கிய மாற்றம்.. எந்த மாடலில்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபோல்டபிள் கிளாம்ஷெல் (Next-generation foldable clamshell) ஸ்மார்ட்போனில் ஒரு குறிப்பிடத்தக்க அப்கிரேட் இருக்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மாடல் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) மாடல் உடன் ஒப்பிடும் போது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளேவில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். ஒரு லேட்டஸ்ட் லீக்ஸ்-ன்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது முந்தைய மாடல்களில் காணப்படும் அசாதாரணமான போல்டர் வடிவிலான வெளிப்புற டிஸ்பிளேவை (Folder-shaped outer screen) கொண்டிருக்காது.

Samsung: வருகிறது இன்னும் பெரிய டிஸ்பிளே.. எந்த மாடலில்?

மாறாக.. அதை அப்படியே அகற்றி, பெரிய, எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே டிசைனை பெறும். நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஐஸ் யுனிவர்ஸால் பகிரப்பட்ட புகைப்படங்கள் உட்பட சில சமீபத்திய அறிக்கைகள் ஆனது, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளே கிட்டத்தட்ட முழுவதுமாக போனின் மேல் பாதியில் நீண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இது - அவுட்டர் ஸ்க்ரீனை சுற்றி குறிப்பிடத்தக்க பெசல்களைக் கொண்டிருந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலை போல் இல்லாமல் - ஒரு நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்தை வழங்கும். இந்த வடிவமைப்பு மாற்றம் ஆனது மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் ஃபிளிப் போன்களில் ஏற்கனவே செய்தவற்றுடன் ஒத்துப்போகிறது.

அழகியல் அடிப்படையில் இனிமேலும் பின்தங்கியிருக்க கூடாது என்று சாம்சங் நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் பெரிய கவர் டிஸ்பிளேவானது சுமார் 4 இன்ச் வரை நீளும் என்றும். இது பயனர்கள் இன்னும் வசதியாக அறிவிப்புகளை சரிபார்க்கவும், புகைப்படங்களை எடுக்கவும், ஸ்மார்ட்போனை அன்போல்ட் செய்யாமலேயே ஆப்களை பயன்படுத்தவும் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் டிப்ஸ்டர் பாண்டாஃப்ளாஷ் (@PandaFlashPro) வழியாக கிடைத்துள்ள தகவல், ஃபோல்ட் 7 மற்றும் ஃபிளிப் 7 ஆகிய இரண்டுமே முந்தைய மாடல்களில் இருப்பதை விட மென்மையான மற்றும் அதிக "நீடித்த ஹிங் மெக்கானிசம்" உடன் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. இந்த புதிய ஹிங் சிஸ்டம் தற்போதைய ஃபோல்ட் 6 உடன் ஒப்பிடும்போது ஃபோல்ட் 7-க்கு குறிப்பிடத்தக்க அளவு குறைவான ஹிங் விசிபிலிட்டியை வழங்கும்.

மேலும் இந்த டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய இரண்டு மாடல்களுமே அவற்றின் முன்னோடிகளை விட பெரிய வேப்பர் சேம்பர் உடன் வரும். இருப்பினும் பழைய மாடல்களில் இருப்பதை போலவே டேப்லெட் வடிவ ஸ்பீக்கர் டிசைன் மற்றும் பட்டன் சிஸ்டம் தக்கவைக்கபடலாம்.

கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்கள் என்ன விலைக்கு வரும்? நம்பத்தகுந்த ஆதாரங்களில் ஒன்றான @PandaFlashPro வழியாக கிடைத்துள்ள தகவலின்படி கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 போன்களின் விலையானது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி இஸட் போல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 6 உடன் ஒற்றுப்போகும்.

Take a Poll

அதாவது பெரும்பாலான சந்தைகளில், கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல்கள் ஆனது கடந்த ஆண்டு வெளியான மாடல்களின் விலைகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் கேலக்ஸி இஸட் போல்ட் 7 ஆனது ரூ.1,64,999 க்கும் மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஆனது ரோ.1,09,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Finally Samsung Seems to Change Galaxy Z Flip 7 Will Get Larger Cover Display than Flip 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X